கொழுக்கட்டை பொடிமாஸ்
பிள்ளையாருக்கு உகந்தது என்று கூறப்படும் இந்த உணவுப் பண்டம், தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கொழுக்கட்டையில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு வகையான கொழுக்கட்டை பொடிமாஸ் இங்கே உங்களுக்காக...
 
ஈஷா ருசி

தேவையான பொருட்கள்:

 • இடியாப்ப மாவு - 2 டம்ளர்
 • பாசிபருப்பு - 1 டம்ளர்
 • வரமிளகாய் - 3
 • இஞ்சி - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 • தேங்காய் துருவல் - அரை மூடி
 • எலுமிச்சை பழசாறு - 2 ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

 • முதலில் இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து 2 டம்ளர் மாவுக்கு 3 டம்ளர் தண்ணீர் கொதித்த நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
 • பிசைந்த மாவை சிறு சிறு சீடைகளாக உருட்டி, வேட்டில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாசி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
 • வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் சீடைகளையும், ஊறவைத்த பாசி பருப்பையும் சேர்த்து, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பரிமாறவும்.
 
  0 Comments
 
Login / to join the conversation1