கோவையில் புதிய ஈஷா மையம்

இந்த வாரம் ஈஷாவில் நடந்தவைகளைப் பற்றி ஒரு பார்வை...
 

இந்த வாரம் ஈஷாவில் நடந்தவைகளைப் பற்றி ஒரு பார்வை...

இலவச கண் சிகிச்சை முகாம்

ஈஷா அறக்கட்டளையும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாமை ஜூலை 12ம் தேதியன்று நடத்தியது. தொண்டாமுத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

தொண்டாமுத்தூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு, கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண், நீர் அழுத்த நோய், மாலைக் கண் நோய், சீழ், நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப் பார்வை, விழித்திரை நோய், கண் எரிச்சல் போன்ற நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டன. பங்கேற்றவர்களில் 36 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு நாளை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும், அங்கே செல்ல இலவச போக்குவரத்து மற்றும் உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. கண்பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையத்தில் புதிய ஈஷா தியான மையம் திறப்புவிழா!

கோவை கவுண்டம்பாளையத்தில் ஜூலை 12ம் தேதியன்று, புதிய ஈஷா தியான மையம் திறக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் நடைபெற்ற இவ்விழாவில் கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.A.P.நாகராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றி தியான மையத்தை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட தியான அன்பர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 800 பேர் வரை அமர்ந்து தியானம் செய்யும் அளவிற்கு உள்ள இந்த மண்டபம், ஈஷா தியான அன்பர்கள் அன்றாட யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் ஈஷா யோகா வகுப்புகள் நிகழ்வதற்கும் ஒரு வாய்ப்பாய் அமைகிறது. இங்கு ஷாம்பவி மஹாமுத்ரா வகுப்புகள் மற்றும் ஹடயோக வகுப்புகள் மாதம் ஒருமுறையும், இலவச உப - யோகா வகுப்புகள் வாராவாரமும் நிகழவுள்ளன. குழந்தைகளுக்கான ஈஷா யோகா வகுப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை இங்கு நிகழும்.

மேலும் இங்கு, ஈஷா DVD’க்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்படுவதோடு, ஈஷா ஆரோக்யா சார்பில் மருத்துவப் பரிசோதனை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈஷா ஆரோக்யாவின் மருத்துவப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1