கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சத்குரு
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சத்குருவின் வருகையைப் பற்றி ஒரு பார்வை...
 
 

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சத்குருவின் வருகையைப் பற்றி ஒரு பார்வை...

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 31) காலை சத்குரு அவர்கள் வருகை புரிந்தார். அணுமின் நிலைய இயக்குனர் திரு சுந்தர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இங்கு வந்த சத்குருவை, அணுமின் நிலைய அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் வரவேற்றனர். அணுமின் நிலையத்தில் இருக்கும் இயந்திரங்கள், அதன் செயல்முறை, அதன் உற்பத்தி போன்ற விஷயங்களை விஞ்ஞானிகள் சத்குருவிற்கு விளக்கினர்.

விஞ்ஞானிகளின் சேவையை பற்றி சத்குரு கூறுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருக்கும் இந்திய பொறியாளர்களும் அதிகாரிகளும் தேசத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றும் பாதையில் - 'தூய்மையான, பாதுகாப்பான சக்தி' என்பது மட்டுமே இவர்களது நோக்கமாய் உள்ளது," என்றார்.

அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடுவிழாவில் சத்குரு அவர்கள் மரக்கன்றினை நட்டார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1