கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி... விளையாட வாரீயளா?

வீடியோ கேம்களிலும் டிவிக்களிலும் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைய சமுதாயம் பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் சொல்லும் இந்த விளையாட்டுகளையும் மகிழ்ச்சியினையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை! அத்தனை சந்தோஷத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கிய நம் கிராமிய விளையாட்டுகளின் மகத்துவத்தையும், விளையாடி மகிழ வேண்டிய அவசியத்தையும் புரியவைக்கிறார் பேராசிரியர்!
கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி... விளையாட வாரீயளா?, kolikkundu thellakku sillanguchi vilaiyada vareeyala?
 
பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன்:

‘காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு - என
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா’

  -பாரதி, குழந்தைகளுக்கு சொல்லி வைத்த பாட்டு இது!

விளையாட்டு... இந்தச் சொல்லுக்கு விருப்பத்தினால் ஆடுவது - விளையாடுவது என்று பொருள். விளையாட்டு என்ற சொல் நம் தமிழ் இலக்கியத்தில் மூவாயிரம் ஆண்டு பழமையான சொல். தொல்காப்பிய இலக்கணத்திலேயே இந்தச் சொல் உண்டு. இந்தச்சொல் இன்றைக்கு எப்படி இருக்கிறது?

‘‘இந்த விளையாட்டெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத!’’
‘‘அவன் விளையாட்டுப் பய!’’
‘‘என்ன இது சின்னப்புள்ள விளையாட்டால்ல இருக்கு?’’

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி, பேய்ப்பந்து, பிள்ளையார் பந்து, மரக்குரங்கு, காயா, பழமா?, பம்பரக்குத்து, கிளித்தட்டு, அணிப்பிள்ளை, பச்சைக்குதிரை என எத்தனை எத்தனை விளையாட்டுக்கள்!

‘‘கடைசியில விளையாடிட்டுப் போயிட்டானாம்ல?’’ என்றெல்லாம் பேச்சு வழக்கில் வருகிற விளையாட்டுக்கு... செயல் விபரம் தெரியாதவன், குழந்தைத்தனம், தவறான செயல் செய்துவிட்டான் என எக்கச்சக்க எடக்குமடக்கு பொருள்!

சிவபெருமானின் விளையாட்டுக்களே, திருவிளையாடல். ‘அலகிலா விளையாட்டுடையார்’ என்பது ராமனின் விளையாட்டுக்களைப் பற்றிய கம்பன் வரிகள். இப்படி விளையாட்டுக்களைத் தேன் தமிழில் கொண்டாடிய தமிழ் மண்ணில், இன்றைக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் விளையாட்டைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

‘‘என் பிள்ளைக்கு விளையாடவே டைம் இல்ல. எப்பவும் ட்யூஷன்தான்!’’ எனப் பெருமிதமாகச் சொல்லும் அம்மாக்களையும் ‘‘இப்படி விளையாடுற நேரத்துல படிச்சேன்னாதான், நாளைக்கு உருப்படுவ!’’ என அதட்டும் ஆசிரியர்களையுமே அதிகமாகக் காண்கிறோம். இப்போது பலபேருக்கு விளையாட்டு என்றால், அது கிரிக்கெட். டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் என்றால் அது அறிவிக்கப்படாத விடுமுறை. விளையாட்டை வேடிக்கை பார்ப்பது ஒரு பொழுதுபோக்கா?

உடற்பயிற்சி, திட்டமிடல், வியூகம் வகுத்தல், பலம் பிரயோகித்தல், வலிமையை நிரூபித்தல், ஒற்றுமையை வலியுறுத்தல் என எல்லாம் அடங்கியதுதானே விளையாட்டு.

தமிழ்நாட்டில் எத்தனை விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன தெரியுமா?

தேவநேயப் பாவணர் அவர்கள், ‘தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்’ என்ற அரியநூலை 1960-களில் எழுதியிருக்கிறார். ‘தலைமுறை தொலைத்த தமிழர் விளையாட்டுக்கள்’ எனும் ஆய்வு நூலை சங்கரன் கோவில் ச.நாராயணன் எழுதி வெளியிட்டிருக்கிறார். நம் நினைவுக் குருவியை நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பறக்க விடுவோம். கிராமத்துத் தெருக்களில் இரவும் பகலுமாக விளையாடி மகிழ்ந்த ஏகாந்த நாட்களை எண்ணிப் பார்ப்போம்.

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி, பேய்ப்பந்து, பிள்ளையார் பந்து, மரக்குரங்கு, காயா, பழமா?, பம்பரக்குத்து, கிளித்தட்டு, அணிப்பிள்ளை, பச்சைக்குதிரை என எத்தனை எத்தனை விளையாட்டுக்கள்!

தமிழகத்தின் பருவ காலங்களுக்கு ஏற்றபடி வசந்தம் போல் வந்து குவியும் விளையாட்டுக்கள்தான் எத்தனை! காற்றடிகாலமா... பட்டமும் காத்தாடியும்.

கோடைக் காலமா... பச்சைக் குதிரை, மரக்குரங்கு, சடுகுடு என ஆண்களுக்கான விளையாட்டுக்கள்.

மழைக் காலமா... வீட்டுக்குள் ஒளிஞ்சாங்கண்டு, கண்ணாமூச்சி.

வீட்டுக்குள் பெண்களுக்காக... பல்லாங்குழி, தட்டாங்கல், கிச்சுக்கிச்சு தாம்பாளம், பாண்டி, தாயம் என அழகு கொஞ்சும் ஆட்டங்கள்.

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி... விளையாட வாரீயளா?, kolikkundu thellakku sillanguchi vilaiyada vareeyala?

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி... விளையாட வாரீயளா?, kolikkundu thellakku sillanguchi vilaiyada vareeyala?

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி... விளையாட வாரீயளா?, kolikkundu thellakku sillanguchi vilaiyada vareeyala?

கோலிக்குண்டு, தெல்லாக்கு, சில்லாங்குச்சி... விளையாட வாரீயளா?, kolikkundu thellakku sillanguchi vilaiyada vareeyala?

எந்த விளையாட்டையும் தொடங்குவதற்கு முன்பு இரு அணிகளாகப் பிரிகிற குழந்தைகள் ‘உத்தி பிரித்துக்கொள்ளுதல்’ என்ற முறையைப் பின்பற்றுவார்கள். இரண்டு பேர் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு ‘ரோஜாப்பூ வேணுமா? மல்லிகைப்பூ வேணுமா?’ எனக் கேட்பார்கள். இப்படி இரு அணிகளாகப் பிரிந்து விளையாடத் தொடங்குவார்கள். நிலவொளியில், அமாவாசை இருட்டில், மழைக்காலத்தில், கோடைக் காலத்தில் என விதவிதமான விளையாட்டுக்கள்.

இவை வெறுமே விளையாட்டு மட்டுமல்ல... உடலின், மனதின் ஆரோக்கியத்துக்கான மகிழ்ச்சி மருந்து. ஓடுவதால், உடல் ஆரோக்கியம். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதால் மொழிப் பயிற்சி. கேள்விகளுக்கு விடை தேடுவதால், சிந்தனை வளர்ச்சி. ஒளிந்துகொண்டு இருப்பவனைத் தேடும்போது, மனதில் எழும் ஆர்வம், கலந்த மகிழ்ச்சி. குழுவாய் விளையாடுவதால் நல்லிணக்கம். அணியை வெற்றி பெறச் செய்ய கற்பனை உத்திகள் விரியும் என எல்லாம் இளம் பருவத்திலேயே விந்தையாய் சேகரிக்கும் விளையாட்டுச் செல்வங்கள். இவை எல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறதா?

‘‘என் பிள்ளை கேட்கிறதெல்லாம் வாங்கித்தர்றேன். ஆனாலும் சத்தே இல்லை’’ என புலம்பும் பெற்றோர் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அன்றைய கிராமத்துச் சிறுவர்களெல்லாம் தங்களுக்கான விளையாட்டுப் பொருட்களை தாங்களே உருவாக்கிக் கொண்டார்கள்.

உதாரணமாக ஓலைக் காற்றாடி செய்வதைச் சொல்கிறேன். பதநீர் குடித்த பனை ஓலை மட்டையைக் காயவைத்து, அதனை உள்ளங்கை அளவு நறுக்கி (+) எழுத்து போல ஒன்றில் ஒன்றைச் சொருக வேண்டும். முற்செடியின் முள்ளை வைத்து பனை ஓலைக் காத்தாடியின் நடுவில் குத்தி, முள் கையில் குத்தாமலிருக்க தக்கை குச்சியில் குத்தி மாட்டு வண்டி கருப்புக் களிம்பை எடுத்து காத்தாடி நடுவில் பொட்டு வைத்தால் ஓலைக் காத்தாடி தயார். அதை எடுத்துக் கொண்டு எதிர் காற்றில் ஓடும் சிறுவரின் மகிழ்ச்சிக்கு ஈடேது.

கோழிக்குண்டு விளையாட்டால்...
விரலுக்குப் பயிற்சி
கிட்டிப்புல் விளையாட்டால்...
கைகளுக்குப் பயிற்சி
சடுகுடு விளையாட்டால்...
கால்கய்க்குப் பயிற்சி
பாடிக்கொண்டே விளையாடுவதால்...
நாவுக்கு மொழிப் பயிற்சி
கண்ணாமூச்சி விளையாட்டால்...
மூளைக்குப் பயிற்சி

இத்தனை பயிற்சிகளை எளிமையாய் செலவின்றிக் கற்றுத்தந்த இந்த விளையாட்டு நிகழ்வுகள் எங்கே போயின?

தொலைக்காட்சி அலைவரிசைகளும், வீடியோ விளையாட்டுக்களும், போட்டிகள் நிறைந்த கல்வி உலகமும், இந்த இனிய விளையாட்டுக்களைத் தின்று கொண்டு இருக்கின்றன. இனியும் இதை விளையாட்டாகக் கருதக் கூடாது. நம் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆரோக்கியமான விளையாட்டுக்களை அறிமுகம் செய்வோம். அன்பை, பண்பை, ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை, வாழ்வின் ரசனையான பக்கங்களை அவர்களுக்குப் பரிசளிப்போம்.

  0 Comments
 
Login / to join the conversation1