கற்றல் உபகரணம் செய்ய உதவிய ஸ்கோப் இன்டர்நேஷனல் ஊழியர்கள்!
உலக யோகா தினக் கொண்டாட்ட நிகழ்வுகள், கற்றல் உபகரணம் செய்ய உதவிய ஸ்கோப் இன்டர்நேஷனல் ஊழியர்கள் மற்றும் தியானலிங்க பிரதிஷ்டை தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் என இங்கே சில நிகழ்வுகளின் தொகுப்பு, உங்கள் பார்வைக்கு!
 
கற்றல் உபகரணம் செய்ய உதவிய ஸ்கோப் இன்டர்நேஷனல் ஊழியர்கள்!, katral upakaranam seyya uthaviya scope international oozhiyargal
 

உலக யோகா தினக் கொண்டாட்ட நிகழ்வுகள், கற்றல் உபகரணம் செய்ய உதவிய ஸ்கோப் இன்டர்நேஷனல் ஊழியர்கள் மற்றும் தியானலிங்க பிரதிஷ்டை தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் என இங்கே சில நிகழ்வுகளின் தொகுப்பு, உங்கள் பார்வைக்கு!

கற்றல் உபகரணம் செய்ய உதவிய ஸ்கோப் இன்டர்நேஷனல் ஊழியர்கள்!

மெதுவாகக் கற்கும் திறனுடைய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கென, கடந்த ஜூன் 18ஆம் தேதி சென்னையில் கற்றல் திறனை மேம்படுத்தும் உபகரணங்கள் உருவாக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்கோப் இன்டர்நேஷனல் ( Scope International, Chennai ) நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 65 பேர் தன்னார்வத்துடன் தங்களை மகிழ்ச்சியுடன் ஈடுபடுத்திக்கொண்டனர். இந்த கற்றல் உபகரணங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் பலனடைவார்கள்!

தியானலிங்கத்தின் 17வது பிரதிஷ்டை தினக் கொண்டாட்டம்!

1999ம் வருடம் ஜுன் மாதம் 24ம் தேதி தியானலிங்கம் சத்குருவால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 24 அன்று தியானலிங்க பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதே போல தியானலிங்கம் சிறப்பு மலர் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு, தியானலிங்க கருவறையில் நாள்முழுவதும் அனைத்து மதங்களைச் சேர்ந்த அன்பர்களின் உச்சாடனம் நிகழ்ந்தது.

ஐநா சபையில் உரையாற்றிய சத்குரு

சிறப்பு அழைப்பாளராக ஐநா சபையினால் அழைக்கப்பட்டிருந்த சத்குரு அவர்கள் உலக யோகா தினத்தன்று நிகழ்ந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியதோடு, ஐநா சபை வளாகத்தில் நூற்றுக்கணக்கான பிரமுகர்களுக்கு நேரடியாக சத்குருவே உபயோகா வகுப்பை வழங்கினார்.

ஈஷா யோகா மையத்தில் உலக யோகா தினக் கொண்டாட்டம்!

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவச உபயோகா வகுப்புகள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து கற்றுத்தரப்பட்டது. சாதனா ஹாலில் வைத்து நிகழ்ந்த இந்த வகுப்புகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு உபயோகா கற்றுச் சென்றனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள ஈஷா மையங்களில் அன்றைய தினம் பிரத்யேகமாக திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில், பொதுமக்களுக்கு உபயோகா கற்றுத்தரப்பட்டுள்ளது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1