பிப்ரவரி 25 முதல் 26 வரை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடந்த தேசிய களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகளில், ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் ஒட்டுமொத்த சேம்பியன்களில் இரண்டாம் இடத்தை தமிழகத்துக்கு கொண்டுசேர்த்ததுள்ளனர்.

மெய்பயட்டு, சுவடுகள் மற்றும் உயரத்தில் உதைத்தல் (High kick) ஆகிய மூன்று விளையாட்டுகளில் ஈஷா சார்பில் மொத்தம் 16 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைத்திலும் சேர்த்து 17 மெடல்களை தனதாக்கிக்கொண்டனர்.

மெய்பயட்டு, சுவடுகள் மற்றும் உயரத்தில் உதைத்தல் (High kick) ஆகிய மூன்று விளையாட்டுகளில் ஈஷா சார்பில் மொத்தம் 16 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைத்திலும் சேர்த்து 17 மெடல்களை தனதாக்கிக்கொண்டனர். 10 முதல் 21 வயது வரையுள்ள மாணவர்கள் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என்ற அடிப்படையில் மூன்று பிரிவுகளில் பங்கேற்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்திய களரிப்பயட்டு சம்மேளனம் மூலம் நடத்தப்படும் இந்த போட்டியில் 15 மாநிலங்களிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.

ஈஷா சம்ஸ்கிருதி மெடல்கள் - தங்கம் 3, வெள்ளி 5, வெண்கலம் 7

ஈஷா ஹோம் ஸ்கூல் மெடல்கள் - தங்கம் 1 மற்றும் வெள்ளி 1

போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களின் பகிர்வுகள்:

“எனக்கு வெற்றி பற்றியோ அல்லது தோல்வி பற்றியோ எந்த சிந்தனையும் இல்லை, ஆனால் நான் போட்டியில் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த விரும்பினேன். இறுதி புள்ளிகளின் அடிப்படையில் நான் இன்னொரு போட்டியாளருடன் சமமாக வந்துள்ளதாக தெரிவித்தனர். எங்களுக்கு சமநிலையை உடைப்பதற்கான ஒரு சுற்று (a tie breaker round) இருந்தது. இறுதியாக நான் இரண்டாம் பரிசு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. எனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாய் விளையாடியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!” -ஸ்ரீஆத்மிகா (மெய்ப்பயட்டு, 2ம் பரிசு வெற்றியாளர்)

“கடந்தமுறை நான் கடுமையாக பயிற்சி செய்தும் என்னால் பரிசு எதையும் பெற இயலாமல்போனது. இவ்வருடம் ஆசிரம நிகழ்ச்சிகள் காரணமாக பயிற்சிக்கான காலம் குறுகிய அளவிலேயே அமைந்ததால் இன்னும் சவாலாக இருந்தது. ஆனால், நான் ஒரே ஒரு பரிசாவது வாங்கிவிட வேண்டுமென்று தீர்மானம் கொண்டிருந்தேன். நான் இரண்டு முதல் பரிசுகளை வென்றபோது எனது சந்தோஷத்திற்கு அளவேயில்லை!”
-வேணுகோபால்
(முதல் பரிசு - மெய்ப்பயட்டு மற்றும் சுவடு)

ஆசிரமத்தில் நிகழவிருந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் காரணமாக நான் சேம்பியன்ஷிப் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொள்வதற்கு குறுகிய அவகாசமே இருந்தன. நான் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியே! -அஷ்விகா (3ம் பரிசு மெய்ப்பயட்டு)

சப்-ஜூனியர் மாணவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. நான் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது மிகக்கடினம் என நினைத்தேன். ஆனால் நானே ஆச்சரியப்படும் விதமாக மூன்றாம் பரிசான வெண்கல மெடலைப் பெற்றேன்.” -பத்மேஷ் ராஜ் (3ம் பரிசு சுவடு)

"அந்த போட்டியில் கலந்துகொண்டு மெடல் ஒன்றை வென்றது அருமையான அனுபவமாக அமைந்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கே களரிப்பயட்டு விளையாடுவதை பார்த்து மகிழ்ந்தேன்." பங்கேற்ற ஒரு மாணவர் பகிர்ந்துகொண்டார்.