மோட்டார் சைக்கிளில் ஒரு யோகி - அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி

அமெரிக்க பூர்வக்குடி மக்களின் ஆன்மீக கலாச்சாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை ஆராயும் விதமாக சத்குரு அமெரிக்காவின் 19 மாகாணங்கள் வழியாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார்.

'Of Motorcycles and a Mystic' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தை அவர் டென்னிஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்திலிருந்து (Isha Institute of Inner Science) பைக்கில் துவங்கினார். அமெரிக்காவின் 19 மாகாணங்கள் வழியாக சுமார் 9477 மைல்கள் பயணித்து மீண்டும் டென்னிஸி வந்தடைந்தார்.

லகோட்டா நாட்டு தலைவருடன் சத்குரு

சத்குரு தனது அமெரிக்க பைக் பயணத்தின் வழித்தடத்தில், லகோட்டா நாட்டின் தலைவர் இஸ்ஸி ப்ளாக் ஸ்பாட்டட் ஹார்ஸ் (Izzy Black Spotted Horse) மற்றும் ரிச்சர்ட் மோவ்ஸ் கேம்ப் (Richard Moves Camp) ஆகியோரை சந்தித்தார். அவர்கள் லகோட்டா ஞானத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அதை அளித்துச் செல்லும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

லகோட்டா நாட்டின் தலைவர் இஸ்ஸி ப்ளாக் ஸ்பாட்டட் ஹார்ஸ் அவர்கள் சத்குருவின் சந்திப்பு குறித்து பகிர்ந்தபோது, சத்குருவின் இருப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாக கூறினார். மேலும், சத்குருவை மீண்டும் சந்திப்பேன் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தங்கள் இருவரது நோக்கமும் ஒன்றிணையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விஷுத்தி சக்கரத்தின் சக்தி அதிர்வுகளுடன் வட அமெரிக்காவின் மாட்டோ டிபிலா

சத்குரு தனது பைக் பயணத்தில் "டெவில்ஸ் டவர்" (#DevilsTower) என்று பொதுவாக அறியப்படும் இடத்திற்கு வருகை புரிந்தார். லகோட்டா மொழியில் இந்த இடத்தின் பெயர் "மாட்டோ டிபிலா" (#MatoTipila) என்பதாகும். அதற்கு "கரடியின் விடுதி" (#BearsLodge) என்று அர்த்தம். அங்குள்ள மரபுக்கதைகளின் படி, இந்த கோபுரத்தில் உள்ள அசாதாரணமான தூண்கள் இந்த கம்பீரமான ஒற்றைக்கல்லில் இருந்து கீழே விழும் கரடிகள் விட்டுச்சென்ற நகக்கீறல்கள் என்று அறியப்படுகிறது.

இந்த இடம் பற்றி சத்குரு பேசும்போது, நமது சக்தி உடலிலுள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான விஷுத்தி சக்கரத்தின் மகத்தான சக்தியதிர்வுகளை இந்த இடம் கொண்டிருப்பதாகத் தெரிவித்ததோடு, ஆன்மீக சாதகர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தகுந்த இடமாக இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

சத்குருவின் ஞானோதய தின கொண்டாட்டம்

சத்குரு ஞானோதயமடைந்த திருநாளான செப்டம்பர் 23ம் தேதியன்று, சத்குருவுடன் சக்திவாய்ந்த தியானம், கேள்வி-பதில் மற்றும் சிறப்பு இசை நிகழ்ச்சிகளுடன் நேரலை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நிகழ்ந்தது. ஆன்லைனில் பல்லாயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் இணைந்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரலின் முன்னெடுப்பு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 151வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தமிழகமெங்கும் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும்பணி அக்டோபர் 2ம் தேதி துவங்கியது. #CauveryCalling

பைக் பயணத்திற்கு இடையே தடையில்லாமல் சத்குரு தரிசன நேரலை

தொடரும் பைக் பயணத்திற்கு இடையேயும் “சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்” என்ற தலைப்பில் இணையம் வாயிலாக தனது தரிசனத்தை ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நேரலையில் வழங்கி வருகிறார் சத்குரு. இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் துவங்கும் இந்த நேரலை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து, சத்குருவின் ஆழமிக்க உள்நிலை தரிசனங்களைப் பெற்று சவாலான இந்நேரத்தை சத்குருவின் அருளுடன் இலகுவாக கடந்து செல்கின்றனர்.

SadhguruDarshan-ExtensionAnnouncement