சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பிலிருந்து, வாரம் ஒரு பாடலை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை, இதன் மூலம் வழங்குகிறோம். சென்ற வாரம், “கனலே..! கனலே..!” துள்ளல் இசையாய் வந்து உங்கள் மனதைக் கொள்ளையடிக்க, இந்த வாரம் மனம் வருடும் மெல்லிசையாய் "இயற்கை என்னும் இறைவன்"...


"புல்லாங்குழல் வழியே புகுந்த காற்று முக்தி பெற்றுத் திரும்புதல் போல்" என்ற ஒரு கவிஞனின் கற்பனை நிஜமாகிறது இந்தப் பாடலில். பாடலின் துவக்கத்தில் இசைக்கப்படும் குழலிசை, பாடல் முழுக்க ஊடுருவி ஜீவனாய்க் கலந்துள்ளது.

ஆழ்கடல் மௌனம், ஓடையின் சல சலப்பு, தென்றலின் இதம், புயலின் வலிமை, கீச்சிடும் பறவைக் கூட்டம், மரங்கள், அதில் அசைந்தாடும் கிளைகள், இலைகள், மலர்கள் என எல்லாமே இயற்கை தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பல்வேறு அம்சங்கள்.

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

இவற்றை எல்லாம் தினம் தினம் பலரும் கடந்து போகிறார்கள், சிலர் மட்டுமே நின்று ரசிக்கிறார்கள், வெகு சிலர் மட்டுமே இயற்கையில் இறைவனையே காண்கிறார்கள். இயற்கை, ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாகப் படைத்திருப்பதற்கு, இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு அணுவும் சாட்சியாக விளங்குகிறது. அதற்கு நாம் கவனம் கொடுத்து ரசிக்கத் துவங்கினால், அதுவே இறைவனை அடையும் முதற்படி என்பதில் சந்தேகமில்லை.

இயற்கையை இறைவனாகக் கண்டவர்கள், அதன்பின் இறைவனில் தன்னைக் காண்பது ஒன்றும் பெரிதில்லை அல்லவா?!

மனதை வருடும் இந்தப் பாடல், கேட்பவர்களை மெல்ல மெல்ல இறைவனில் சேர்க்கிறது.

பாடல் வரிகள் இங்கே...

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்
உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன் - ( இயற்கை)

பொருள் தேட முயலவில்லை
செல்வம் சேர்க்க ஆசையில்லை
அருள் தேடி உன் பாதம் பற்ற
மேகம் தெளிந்த வானம் போல
என்னுள் விடியல் கண்டேன் - ( இயற்கை)

அருள் மழையும் பொழியக் கண்டேன்
கல்லும் கசிந்து உருகக் கண்டேன்
நீல வானில் விடியல் போல
எந்தன் உள்ளம் ஒளிரக் கண்டேன்
கரை சேர ஆசை கொண்டேன்
பணிந்து விட்டேன் கறைந்து விட்டேன்
உன்னில் கலந்து விட்டேன் - ( இயற்கை)


Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/