பாலிவுட் டைரக்டர்

சேகர் கபூர் - இந்திய திரைப்படத் துறையின் பிரபல நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். தன்னுடைய தனித்துவமான படைப்பாற்றலை திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு கொண்டு சென்றவர். சத்குருவுடனான முதல் சந்திப்பு முதல், ஈஷாவில் தான் கலந்துகொண்ட மஹாசிவராத்திரி வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

சேகர் கபூர்:

ஈஷா யோக மையத்தில் சமீபத்தில் சத்குரு நடத்திய ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றேன். மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. பெரும்பாலான மக்கள் நல்ல ஆரோக்கியத்துக்காக மட்டுமே யோகாவை நாடுகிறார்கள். ஆனால், யோகா என்பது ஆரோக்கியத்தையும் தாண்டியது என்பதை இப்போது உணர்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அங்கு யாரும் இதைச் செய், இப்படிச் செய் என்று கட்டளை இடுவதில்லை. ஆனால், பணிகள் மிக நேர்த்தியாக, மிகத் துரிதமாக நடக்கின்றன.

யாரெல்லாம், ஆரோக்கியத்துக்காக மட்டுமின்றி, அதற்கும் மேலான ஒரு நோக்கத்துக்காக யோகாவைக் கற்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அவர்கள் அதை உடனே செய்யுங்கள். நான் ஏன் இவ்வளவு தாமதப்படுத்தினேன் என்று ஆச்சரியப்படுகிறேன். சத்குருவின் யோக வகுப்புகள் அந்த அளவு என்னை கவர்ந்தன. ஒவ்வொரு வகுப்பு முடிந்து வெளி வந்தபோதும் மேலும் கருணையுள்ளவனாக மாறி இருந்தேன். உடல் நலத்துக்கும் அதிகமான ஓர் இலக்கோடு யோகாவை அணுகும்போது அது வாழ்க்கையையே திருப்பிப்போடும் அனுபவமாக இருக்கிறது. உங்களில் பலருக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு முதல் அனுபவம். எனவே, அற்புத உணர்வில் இருக்கிறேன்.

ஐந்து வருடங்களுக்கு முன் போர்ட்டோ ரிக்கோ என்னும் இடத்தில் சத்குருவைச் சந்தித்தேன். அப்போது நாங்கள் இருவருமே உலகளவிலான ஒரு மாநாட்டில் பங்கேற்க அங்கு கூடியிருந்தோம். நள்ளிரவில் ஒரு நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தைத் தேடி காரில் சென்றோம். சத்குரு கார் ஓட்ட நீங்கள் உட்கார்ந்து செல்வதென்பது மயிர்க் கூச்செறியும் விஷயம். எனவே, நான் அவரை ‘ஸ்பீட் குரு’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.
அதன் பிறகு எங்களுக்கு இடையே தொடர்பு இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தொழில் அதிபரின் வீட்டு விருந்தில் நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர் என்னை ஈஷா மையத்தில் நடக்கும் மஹாசிவராத்திரி விழாவுக்கு அழைத்தார்.

நான் ஆன்மிகச் சடங்குகளையோ, விழாக்களையோ எப்போதுமே நாடியதில்லை. சடங்குகளில் உள்ள முக்கியத்துவத்தை நான் மறுக்கவில்லை என்றாலும் எனக்கென்று ஒரு தனி வழியை வைத்திருந்தேன். ஆனால், நான் ஆசிரமத்தில் நடைபெற்ற மஹாசிவராத்திரியில் பங்கேற்றபோது, எந்த எதிர்ப்பும் இன்றி இவற்றில் பங்கேற்பவர்கள் எத்தகைய நல்ல பலன்கள் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அந்த மஹாசிவராத்திரியில் ஏழு லட்சம் மக்களோடு நானும் கலந்துகொண்டேன். இரவு முழுவதும் இசை நிகழ்ச்சிகள் இருந்தன. விழாவுக்கு வந்தவர்கள் உட்சாடனங்களில் கலந்து கொண்டதுடன் தங்களை மறந்து நடனமாடினார்கள். அன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் நானும் மூழ்கிப்போனேன். யாருமே அதில் மூழ்கித்தான் போக வேண்டும்.

மஹாசிவராத்திரியை விடவும் அப்போது என்னை மிக கவர்ந்தது ஈஷாவுக்காக தங்களை அர்ப்பணித்திருக்கும் தன்னார்வத் தொண்டர்கள்தான். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள் என்று உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் வந்திருந்தார்கள். தங்களை முழுக்க ஒப்புக்கொடுக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் விரும்புவதெல்லாம் ஆன்மிக விழிப்புணர்வு மட்டுமே. அதற்காக அவர்கள் நாள் முழுவதும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. நிர்வாக வேலைகளைத்தான் செய்கிறார்கள். ஒரு நாளில் அவர்கள் ஐந்து மணி நேரம்கூட தூங்குவது இல்லை. அவர்கள்தான் ஈஷா மையத்துக்குள் பள்ளிகள் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டின் கிராமப்புறங்களுக்கும் சென்று பள்ளிகள் நடத்துகிறார்கள். இயற்கையைக் காப்பாற்ற வழிகள் தேடுகிறார்கள். உடல்நலம் கெட்டவர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் புத்துணர்வு பெற புத்துணர்ச்சி மையம் நடத்துகிறார்கள்.

ஈஷாவின் அத்தனை வளர்ச்சிக்கும் அவர்கள்தான் காரணம். மிகவும் அமைதியாக, மிகவும் விரும்பப்படுபவர்களாக இருக்கிறார்கள். அங்கு யாரும் இதைச் செய், இப்படிச் செய் என்று கட்டளை இடுவதில்லை. ஆனால், பணிகள் மிக நேர்த்தியாக, மிகத் துரிதமாக நடக்கின்றன.

நீங்கள் அரசியல் கட்சியின் மாநாடு ஏதேனும் சென்றால் பார்த்திருக்க முடியும், ஒரு லட்சம் பேர் பங்கேற்றாலே போலீஸ், இத்யாதிகள் என்று எவ்வளவு களேபரம் இருக்கும்.

சத்குருவைப் பார்க்கும்போது தொண்டர்களின் கண்களில் நீர் வழிகிறது. அதை என்னால் சிறிது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தொண்டர்களைப் பார்க்கும்போது சத்குருவின் கண்களிலும் நீர் வழிகிறது.

ஆனால், ஈஷாவின் மஹாசிவராத்திரியில் ஏழு லட்சம் பேர் கலந்துகொண்டனர். எங்கோ ஓரிரு காவல் துறையினர்தான் இருந்தனர். அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் ஈஷா தொண்டர்களே மிகவும் சிறந்த முறையில் பார்த்துக்கொண்டனர். சத்குரு மேடையில் நடனமாடியபோது, அங்கே இருந்த அனைத்து மக்களும் உற்சாகமும் கட்டுக்கடங்காத ஆர்வமுமாய் தங்களை மறந்து நடனமாடினார்கள். ஆனால், ஒரு சிறிய அசம்பாவிதம் கிடையாது.

அத்தனை லட்சம் மக்கள் இருந்தாலும், ஆயிரக்கணக்கில் கார், பைக் என வாகனங்கள் இருந்தாலும், ஒரு ஜோடி செருப்புகூட காணாமல் போகவில்லை. ஒரே ஒரு பைக் காணாமல் போயிருந்தது. அதையும் தன்னார்வத் தொண்டர்கள் தேடி உரியவரிடம் சேர்ப்பிக்கும் வரை சத்குருவும் பந்தலில் இருந்து நகரவில்லை. இதையெல்லாம் பின்னர் அறிந்தபோது மிகவும் வியப்பாக இருந்தது.

ஆசிரமத்தில் நான் இருந்தபோது, அனைவரும் சத்குரு மேல் மிக பக்தியாக இருப்பதைப் பார்த்தேன். சத்குருவும் அவர்களிடம் மிக மிக ஈடுபாட்டுடன் இருப்பதை நேரிலேயே பார்த்தேன். இயேசு செல்லுமிடங்களில் எல்லாம் அன்பைப் பரப்பினார் என்று படித்திருக்கிறேன். அது எப்படி என்று யோசித்திருக்கிறேன். அது சாத்தியமே என்பதை சத்குருவைப் பார்த்துப் புரிந்துகொண்டேன். சத்குருவைப் பார்க்கும்போது தொண்டர்களின் கண்களில் நீர் வழிகிறது. அதை என்னால் சிறிது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தொண்டர்களைப் பார்க்கும்போது சத்குருவின் கண்களிலும் நீர் வழிகிறது. இது இரு வழிப் பாதையாக இருக்கிறது. தொண்டர்களைப் பார்க்கும்போது சத்குருவே ஒரு பக்தனாக மாறிவிடுகிறார். அத்தனை வேலைகளுக்கு இடையிலும் ஆசிரமத்தின் கட்டடப் பணிகள் உட்பட சிறிய விஷயங்களிலும் சத்குரு காட்டும் ஆர்வம் பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.

பிரம்மச்சாரிகள் உட்சாடனம் செய்துகொண்டு இருந்த இடத்துக்கு ஒரு முறை சென்றேன். அந்த இடமே மிகவும் சக்தியாக உணர்ந்தேன். பிரம்மச்சாரிகளின் வாழ்க்கைமுறை மற்றும் அவர்களின் உடல்திறன்கூட மிக ஆச்சரியமாக இருக்கிறது. நாள் முழுக்க உழைக்கிறார்கள். நான் அங்கே இருந்த போது பலமுறை மிகவும் தாமதமாகத்தான் படுக்கப் போனேன். அதற்கு அப்புறமும் அவர்கள் விழித்திருந்தார்கள். காலையில் நமக்கு முன்னால் அவர்கள் செயலில் இறங்கி விடுகிறார்கள். மிகவும் புத்துணர்ச்சியாகவும் தெரிகிறார்கள். எப்போதும் நடை, வேலை, யோகா கற்பிப்பது என்றே இருந்தார்கள். நான் அவர்களுடன் ஒரு மாலை வேளையில் உதைபந்து விளையாட முயற்சித்தேன். அப்போது அவர்கள்தான் மிகவும் துடிப்பான ஆட்டக்காரர்களாக இருந்தார்கள். மற்றவர்களைப் போன்று தூக்கம், ஓய்வு இல்லாமலே மிகவும் சக்தியாக இருக்கிறார்கள். அவர்களை விசாரித்தால் மிகவும் குறைவாகவே சாப்பிடுவது தெரிகிறது. அப்படியானால் இவ்வளவு சக்தி அவர்களுக்கு எங்கிருந்துதான் வருகிறதோ?

ஈஷா ஹோம் ஸ்கூல் என்று மைய வளாகத்திலேயே ஒரு பள்ளி இருக்கிறது. நான் பெரு நகரங்களில்கூட, ஏன் உலகெங்கும்கூட, குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது கவனித்திருக்கிறேன். ஆனால், இந்தக் குழந்தைகள் மிகவும் விழிப்போடு, ஒரு நோக்கத்தோடு செயல்படுவதைப் பார்க்கிறேன். எந்த நேரத்திலும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இப்படி மையத்தில் நான் இருந்தபோது, எதைப் பார்த்தாலும், அது வியப்பானதாகவும், அற்புத உணர்வாகவும் இருந்தது. இரு முறை சத்குருவுடன் தியானலிங்கம் சென்றேன். அப்போது எங்ளைவிட்டு தொலைதூரத்தில் இருந்த மக்கள்கூட சத்குருவிடம் இருந்து எதையோ பெற முடிவதை நான் உணர்ந்தேன். அதுவும்கூட அன்பென்னும் சக்தியின் இன்னொரு பரிமாணம்தானோ?

சத்குரு ஆன்மிகம்பற்றி மட்டுமே பேசுகிறார். தங்களின் ஆன்மிகச் சக்தியை அறிவதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கை சூழ்நிலையை மேம்படுத்திக்கொள்வதையே பேசுகிறார். மத நம்பிக்கைகளை அறவே ஒதுக்குகிறார். துடிப்பான இந்தியா இங்கே இருந்துதான் துவங்குகிறதா? சத்குரு மற்றும் அவரைப்போன்ற மனிதர்களிடம்தான் மக்கள் அணி சேர்ந்து புதிய உலகத்தைப் படைக்கப்போகிறார்களா? அப்படித்தான் இருக்கும்!