ஈஷாவும் நானும் - சு.கனகரத்தினம், ஸ்தபதி
திரு. கனகரத்தினம் அவர்கள், தியானலிங்கம் கட்டிய காலம்தொட்டு ஈஷாவுடன் தொடர்பில் இருந்து வருபவர். ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, திருமூர்த்தி உருவச் சிலை போன்றவற்றை உருவாக்கிய அனுபவத்தையும், அப்போது சத்குருவுடன் கழித்த நாட்களின் நினைவுகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
 
 

திரு. கனகரத்தினம் அவர்கள், தியானலிங்கம் கட்டிய காலம்தொட்டு ஈஷாவுடன் தொடர்பில் இருந்து வருபவர். ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, திருமூர்த்தி உருவச் சிலை போன்றவற்றை உருவாக்கிய அனுபவத்தையும், அப்போது சத்குருவுடன் கழித்த நாட்களின் நினைவுகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

திரு.சு.கனகரத்தினம்:

ஈஷாவில் அறிமுகமானது...

பல தலைமுறைகளாக சிற்பத் தொழிலில்தான் எங்கள் குடும்பம் ஈடுபட்டு வருகிறது. திருப்பூரில் ஈஷா யோகா ஆசிரியர் சாமிநாதன் அவர்கள் என்னை ஒருமுறை சந்தித்து, ‘வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நாங்கள் தியானலிங்கம் அமைக்கவிருக்கிறோம். நீங்கள் உதவ முடியுமா?’ என்று கேட்டார். உடனே ஒப்புக்கொண்டு ஈஷா யோக மையம் வந்தேன். நான் இங்கு பணியில் ஈடுபட்டதற்கு முன்னர் தியானலிங்கத்தைப் பற்றி சிற்ப

வகுப்பு என்னிடம் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. கோபங்கள் என்னிடம் இருந்து மறைந்தன. மனம் மிகவும் பக்குவப்பட்டது. சத்குரு சொன்னது முழுக்க நிஜம் என்று புரிந்தது.

சாஸ்திரத்தில் படித்ததில்லை. சிற்ப சாஸ்திரத்தில் தியானலிங்கம் பற்றி இல்லை என்றே நினைக்கிறேன். எனவே, சிறிது தயக்கத்துடன்தான் இருந்தேன். ஆனாலும் ஆவுடையார் உள்ளிட்ட தியானலிங்கத்தின் வடிவமைப்பை சத்குரு தெளிவாக விளக்கினார். எனது குரு மரியாதைக்குரிய சிற்பக் கல்லூரி முதல்வர் திரு.வை.கணபதி ஸ்தபதி அவர்களும் என்னை ஊக்கப்படுத்தினார். எனவே, நான் அப்பணியில் ஈடுபட ஆரம்பித்தேன். முதலில் தியானலிங்கத்தின் பீடமான ஆவுடையார் பணியில் ஈடுபட்டேன்.
ஆவுடையார் பணியில் ஈடுபட்டிருந்தபோது சத்குரு ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வந்து அருகில் இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையாகக் கவனிப்பார். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் கூறும் ஆலோசனையும் விமர்சனமும் மிகவும் வியப்பைத் தரும்.

ஈஷா யோகாவின் அற்புதங்கள்

ஒருமுறை சத்குரு என்னிடம் மெதுவாக ஈஷா யோகா வகுப்பு பற்றி சொல்லி, நீங்களும் வகுப்பு செய்யலாமே என்று சொன்னார். ‘யாரிடமும் கோபம் காட்ட வேண்டாம், அதனால் எப்போதும் நன்மை இல்லை. மேலும் பொறுமையாகவும் ஒரே சிந்தனையோடும் இந்தப் பணியில் ஈடுபட முடியும்’ என்று கூறினார். அதன் பிறகு திருப்பூரில் வகுப்பு எடுத்துக்கொண்டேன். வகுப்பு என்னிடம் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. கோபங்கள் என்னிடம் இருந்து மறைந்தன. மனம் மிகவும் பக்குவப்பட்டது. சத்குரு சொன்னது முழுக்க நிஜம் என்று புரிந்தது.

தியானலிங்கத்தின் கோள வடிவ மேற்கூரை அமைக்கும்போதும் நான் அருகில் இருந்தேன். அப்போது மேற்கூரை அமைக்கும் பணியில் தன்னார்வத் தொண்டர்களும் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்கள். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் யோக மையம் வந்து தங்கியிருந்து இந்த மேற்கூரைப் பணியில் ஈடுபட்டதை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். அவர்கள் வீட்டுப் பணிகளில்கூட இத்தனை ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள். இவையெல்லாம் சத்குருவிற்கு மட்டுமே சாத்தியம் என்று நினைப்பேன்.

சத்குரு வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே மிகவும் அதிர்ஷ்டம் என்று பலரும் நினைக்கும்போது, அவர் உடன் இருந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது குறித்து நினைக்கும்போதெல்லாம் புல்லரிக்கும்!

நான் இந்தத் துறையில் இருப்பதால் பெரிய யோகிகள், மகான்கள் நிறையப் பேரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் அனைவரைக் காட்டிலும் இவரிடத்தில் அபரிமிதமான சக்தியையும் பண்பையும் என்னால் பார்க்க முடிகிறது. பிராணப் பிரதிஷ்டை என்பது அந்தக் காலத்து யோகிகள் அதுவும் சிலர் மட்டுமே செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் காலத்திலும் ஒரு யோகி இப்படி பிராணப் பிரதிஷ்டை மூலம் சிலைகளுக்கு உயிர் கொடுப்பது என்பது மிகப் பெரிய விஷயம்.

நான் கண்ட சத்குரு...

நான் இந்தக் கோவில் பணியை ஆரம்பித்தபோது, அவர் எப்படி எளிமையாக இருந்தாரோ, அதே எளிமையோடுதான் இன்னமும் இருக்கிறார். என்னிடம் அன்று எப்படிப் பழகினாரோ, அதே எளிமையோடுதான் இன்றும் என்னிடம் பழகுகிறார். ஆனால், அருள் நிலையில் அவரிடம் நிறைய மாற்றங்களை உணர்கிறேன். தற்போது இந்தக் கோவில் பணிகளில் என் மகன் ராதா கிருஷ்ணனும் ஈடுபட்டு வருகிறார். அவர் பி.இ சிவில் படித்து ஒரு பிராஜக்ட் வொர்க் செய்துகொண்டு இருந்தார். என்னைப் பார்க்க அவர் யோக மையம் வந்தபோது, சத்குரு அவரைப் பார்த்து விசாரித்துவிட்டு, பிறகு ‘என்னப்பா நீங்களே இந்தத் துறையை விட்டுப் போயிட்டீங்கன்னா, அப்ப இந்தத் துறைக்கு புதுசா யார் வருவாங்க?’ எனக் கேட்டார். அன்றிலிருந்து என் மகனும் முழுமையாக இந்தப் பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

கோவிலில் உள்ள திருமூர்த்தி சிலைகள் மற்றும் லிங்கபைரவி கோவிலுக்கான சிலைகள் அவர் செய்ததுதான். நான் அருகில் இருந்து ஆலோசனைகள் மட்டும் சொல்வேன். திருமூர்த்தி சிலையில் உள்ள ஒவ்வொரு சிறு அம்சமும் ஆடை அணிகள், ஆபரணங்கள் உள்பட சத்குரு மனதில் உருவானவைதான். இவ்வளவு பெரிய சிலைகளில் எங்கு தண்ணீர் ஊற்றினாலும் ஒரு சொட்டுகூட சிலையில் தேங்காது. ‘இந்தச் சிலைகள் எப்போதும் வெட்டவெளியிலேயே இருக்கப்போகின்றன. எனவே, மழை பெய்தாலும் உடனே மழை நீர் வடிந்துவிட வேண்டும்’ என்று காரணம் சொன்னார் சத்குரு. லிங்கபைரவி கோயிலுக்கான தூண்கள் பல்லவர் காலத்தைப் போன்று நுணுக்கமாக செய்யப்பட்டு வருகின்றன. நம் கலாச்சாரம் அனைத்து வகைகளிலும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் சத்குரு ஆர்வமாக இருப்பதாகவே உணர்கிறேன்.

ஆன்மிகப் பணிகளில் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் என பல துறைகளிலும் அவர் மக்களுக்கு உதவி வருவது அவருடைய மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது. யோக மையத்திற்கு அருகில் தாணிக்கண்டி என்னும் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கிருக்கும் இளைஞர்கள் எந்த வாய்ப்பும் கிடைக்காமல், அல்லது முயற்சிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு சிற்பத் தொழிலில் பயிற்சி கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டார் சத்குரு. ஆர்வமில்லாத அவர்களுக்கு பயிற்சியளிப்பது மிகச் சிரமமாக இருந்தது. ஆனாலும் சத்குருவின் தொடர்ந்த ஊக்குவிப்பால் தாணிக்கண்டி மட்டுமல்லாமல் சுற்றியுள்ள வேறு ஆதிவாசி கிராமங்களில் இருந்தும் இளைஞர்கள் வந்து தற்போது இத்தொழிலில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சத்குரு வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே மிகவும் அதிர்ஷ்டம் என்று பலரும் நினைக்கும்போது, அவர் உடன் இருந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது குறித்து நினைக்கும்போதெல்லாம் புல்லரிக்கும்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1