ஈஷாவிற்கு சிறந்த பதிப்பாளர் விருது
யோகத்தில் மட்டுமல்ல, ஈஷா புத்தகத்திலும் சூப்பர்... நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த பதிப்பாளர் விருது!
 
 

தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில், சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்தபடியாக நெய்வேலி புத்தகக் கண்காட்சி விமர்சகர்களாலும், வாசகர்களாலும் சிறப்பானதாக மதிப்பிடப்படுகிறது.

இவ்வருடம் நெய்வேலி புத்தக கண்காட்சி ஜுன் 29 முதல் ஜுலை 8 வரை நடைபெற்றது. ஜுன் 30 அன்று, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 'சிறந்த பதிப்பகத்திற்கான விருது' ஈஷா பதிப்பகத்திற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழா புத்தக கண்காட்சியின் பாகமாகவே அமைந்திருந்தது மற்றுமொரு சிறப்பு.

ஈஷா பதிப்பகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் இதுவரை 150க்கும் மேற்பட்ட நூல்களோடு பல தலைப்புகளில் டிவிடிக்களும் பதிப்பித்துள்ளது. மேலும் ஜப்பானியம், சீனம் மற்றும் பிரெஞ்சு போன்ற பிற சர்வதேச மொழிகளிலும் சத்குருவினுடைய புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

உலகிலுள்ள அனைவரும் "ஒரு சொட்டு ஆன்மீகமாவது" உணர வேண்டும் என்ற சத்குருவின் ஆழ்ந்த விருப்பத்தில் வெளிவரும் சொற்களை புத்தங்கங்கள் மற்றும் டிவிடிக்கள் மூலமாக மக்களுக்கு எடுத்துரைப்பதே ஈஷா பதிப்பகத்தின் நோக்கமாகும்.

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

this award is late but latest. this is sadguru's blessings only