உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு பார்வை...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வரும் உலக யோகா தினத்தை கொண்டாட, ஜுன் 1 முதல் 31ம் தேதி வரை ஈஷா யோக மையம் இலவச யோக வகுப்புகளை உலகம் முழுக்க வழங்க திட்டமிட்டு, அதனை நிறைவேற்றியும் வருகிறது. தனிச்சிறப்பு வாய்ந்த இந்தச் சூழலில் பொதுமக்கள் எளிமையாக, அதே சமயம் ஆழமான பலன்களைப் பெற வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் சில யோகப் பயிற்சிகளை சத்குரு வடிவமைத்துள்ளார்.

அனைவருக்கும் யோகா

அரசாங்க அலுவலகங்களிலிருந்து ஊடக அலுவலகங்கள் வரை, கல்வி நிறுவனங்களிலிருந்து தொழில்துறை வரை, இல்லங்களிலிருந்து சிறைச்சாலை வரை ஈஷாவின் செயல்பாடுகள் பரிபூரணமாய் அனைத்து துறைகளையும் சென்று சேரும் விதத்தில் நிகழ்ச்சிகளை ஈஷா யோக மையம் திட்டமிட்டுள்ளது. உலக யோக தினக் கொண்டாட்டங்கள் யாவும் ஏற்கனவே சூடுபிடித்து, முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது மகிழ்ச்சி தரும் மற்றொரு செய்தி.

சிறப்பு விருந்தினர்கள்

ஜுன் 21ம் தேதி, உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

  • புதுச்சேரியில் நடக்கவிருக்கும் உலக யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு மாண்புமிகு புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் தலைமையேற்று நடத்த உள்ளார்கள்.
  • கோவையில் - மாண்புமிகு சட்டத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. வேலுமணி அவர்கள் தலைமையேற்று நடத்த உள்ளார்கள்.
  • நாகர்கோவிலில் - மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. ஸ்ரீபொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று நடத்த உள்ளார்கள்.
  • அன்றைய தினம், சென்னை YMCA மைதானத்தில் காலை 6.30 மணிக்கு, சத்குரு அவர்கள் இந்த எளிய யோகப் பயிற்சிகளை பொதுமக்களுக்கு சொல்லித் தருவார்கள்.
  • ஜூன் 20 ம் தேதியன்று, பெங்களூரூவில் சத்குரு அவர்கள் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. சித்தராமைய்யா அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

உங்கள் ஊரில் யோகா

உலக யோகா தினத்தன்று, உங்கள் நகரங்களில் இலவச யோகப் பயிற்சிகளை நடத்த ஈஷா அறக்கட்டளை உங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த நிகழ்ச்சி 1.5 மணி நேரம் நடைபெறும். ஆரோக்கியம், அமைதி, அன்பு, ஆனந்தம், வெற்றி மற்றும் உள்நிலை அறிதல் ஆகியவற்றிற்கான தனித்தனி 5 நிமிட பிரத்யேக பயிற்சிகள் இதில் கற்றுத்தரப்படும். இவை ஆன்லைனிலும் வழங்கப்படுவது மற்றுமொரு சிறப்பு அம்சம். ஆன்லைனில் கற்றுக்கொள்ள YogaYoga.org என்ற இணையதளத்திற்கு செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளவும்:

சென்னை 83000 11000
மேற்கு மண்டலம் 83000 45000
வடக்கு மண்டலம் 83000 31000
தெற்கு மண்டலம் 83000 98444
கிழக்கு மண்டலம் 83000 98222

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஆனந்தமான ஆரோக்கியமான வாழ்வு - அனைவருக்கும் ஒரு துளி யோகா! நாம் இதனை நிகழச் செய்வோம்.