ஈஷாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அஞ்சலகம், சென்னையில் புதிதாய் மலர்ந்துள்ள ஈஷா மையம் பற்றி இந்த வார ஈஷாவில் நடந்தவையில் தெரிந்துகொள்வோம்.

ஈஷாவில் புதிய தபால் நிலையம்

ஈஷாவில் புதிய அஞ்சலகம்!, Ishavil puthiya anjalagam

ஈஷாவில் புதிய அஞ்சலகம்!, Ishavil puthiya anjalagam

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோகா மையத்தில் மார்ச் 3ம் தேதியன்று புதியதாக தபால் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை தமிழ்நாடு மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி மஞ்சு பிள்ளை திறந்து வைத்தார். இந்த அஞ்சலகம் மூலம் சுமார் 3000 பேர் சேமிப்பு கணக்கு துவங்க வாய்ப்புள்ளது. விரைவில் புதிய பின்கோடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வங்கி மற்றும் மின்னணு பண பரிமாற்றத்துக்கான வசதியுடன் கூடிய முழுமையான கிளை அலுவலகமாக செயல்பட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

சென்னை - தி.நகரில் புதிய ஈஷா யோக மையம்

சென்னை - தி.நகரில் புதிய ஈஷா யோக மையம்,  chennai t-nagar ishayogacenter

சென்னை - தி.நகரில் புதிய ஈஷா யோக மையம்,  chennai t-nagar ishayogacenter

சென்னை - தி.நகரில் புதிய ஈஷா யோக மையம்,  chennai t-nagar ishayogacenter

சென்னை தி.நகரில் ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியால் மற்றுமொரு தியான மண்டபம் மார்ச் 1 அன்று திறக்கப்பட்டுள்ளது. சத்குருவின் சந்நிதியுடன் கூடிய இந்த மையத்தில் மாதாந்திர சத்சங்கம், ஈஷா யோகா 7 நாள் வகுப்புகள் ஆகியவை நடைபெறும். தியான அன்பர்கள் தங்கள் யோகப்பயிற்சிகளை தினம் காலையும் மாலையும் இங்கு வந்து செய்து கொள்ளலாம். இது தவிர, இன்னும் சில நாட்களில், மற்ற ஈஷா வெளியீடுகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும்.

முகவரி: 24, பகவந்தம் தெரு, தி.நகர். (திருமலா திருப்பதி தேவஸ்தானம் எதிரில்)
செயல்படும் நேரம்:
காலை 6 முதல் 8:30 வரை
மாலை 6 முதல் 8:30 வரை
தொடர்புக்கு: 044 - 43624777

அக்ரி எக்ஸ்போவில் ஈஷா பசுமைக்கரங்கள்

அக்ரி எக்ஸ்போவில் ஈஷா பசுமைக்கரங்கள், Project green hands

ஈரோடு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி சார்பாக மார்ச் 14ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அக்ரி எக்ஸ்போ" கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தினரும் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த கண்காட்சியில், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் சார்பாக சரக்கொன்றை, பென்சில், பூவரசு, மலைவேம்பு போன்ற 15 வகை மரக்கன்றுகள் காட்சியகப்படுத்தப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.