ஈஷாவில் நடந்தவை...
தங்கள் பிறந்த நாளையும் பசுமையான நாட்களாக கொண்டாடும் ஈஷா வித்யா குழந்தைகள், ஈஷா கிரியா புயல் தற்சமயம் கொங்கு நாட்டில் மையம் கொண்டுள்ள கதை, லிங்கபைரவி, சென்னை வீடுகளில் குடிகொண்ட உற்சவம்... ஆகியவை இந்த வார ஈஷாவில் நடந்தவையில்...
 
 

2
3

துப்புரவு தொழிலாளர்களுக்கு ஈஷா கிரியா

கோவை துப்புரவு தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட ஈஷா கிரியா வகுப்புகளைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கும் ஈஷா கிரியா வகுப்புகள் நடைபெற்றது. ஜூன் 25 முதல் 29 தேதி வரை நடந்த இந்த வகுப்புகளில் 600 பேர் கலந்துகொண்டனர். ஈரோடு மேயர் திருமதி. மல்லிகா பரமசிவம் அவர்கள் இந்த வகுப்புகளைத் துவக்கி வைத்தார்.

4
5
6

பசுமையாகும் பிறந்தநாள்

நடப்பு கல்வியாண்டிலிருந்து, ஈஷா வித்யா பள்ளி குழந்தைகள், தங்கள் பிறந்த நாட்களில் சக மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவதோடு மட்டும் இல்லாமல், தங்கள் பெயரில் பள்ளி வளாகத்தில் ஒரு மரக் கன்றையும் நடவுள்ளனர். அவ்விதத்தில் கோவை ஈஷா வித்யா பள்ளியில், முதன்முதலாக ஜூன் 21ம் தேதி இவ்விழா கொண்டாடப்பட்டது.

1

சென்னையில் பைரவி புண்ணிய பூஜை

ஜூன் 11-15 ம் தேதி வரை, சென்னையில் பைரவி புண்ணிய பூஜை மற்றும் தேவி யந்திர பூஜை நடைபெற்றது. 5 நாட்கள் நடந்த இந்த பூஜைகளில், சென்னையின் 11 இல்லங்களில் பைரவி புண்ணிய பூஜைகளும், சென்னை, வேலூர் மற்றும் பாண்டிச்சேரியில் 3 இல்லங்களில் யந்திரப் பூஜைகளும் நடைபெற்றது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1