கோடை வெயில் ஓய்ந்தாலும், ஈஷாவில் நடப்பவை என்றும் ஓயாமல் நடந்த வண்ணமே இருக்கும். ஈஷா யோக மையத்திலும், பிற ஈஷா திட்டங்களினாலும் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த வாரம் இங்கே உங்களுக்காக...

சத்குருவுடன் இன்னெர் இஞ்சினியரிங்அமெரிக்காவின் அட்லான்டா நகரில் மே 16 முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற சத்குருவுடனான "இன்னெர் இஞ்சினியரிங்" வகுப்பில் 800 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு சத்குருவிடமிருந்து ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை பெற்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சத்குருவுடன் இன்னெர் இஞ்சினியரிங், Sadhguruvudan Inner Engineeringசத்குருவுடன் இன்னெர் இஞ்சினியரிங், Sadhguruvudan Inner Engineering
ஈஷா கிராமியக் கலைக்குழு பயிற்சி முகாம்கிராமியக் கலைகளை உயிர்பிக்கும் விதமாக, இந்தக் கலையையே தங்களது வாழ்க்கையாக நினைத்து வாழும் மனிதர்கள் மூலமாக, குழந்தைகள் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த ஈஷா கிராமிய கலைக் குழு பயிற்சி முகாம் சேலம் ஈஷா கிராம மருத்துவமனையில் மே 1 - 5 தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில், கரகாட்டம், ஒயிலாட்டம், லம்பாடி, தேவராட்டம், மான்கொம்பு, கலியல், பின்னல் ஆகிய நடனங்கள் கற்றுத் தரப்பட்டன.

ஈஷா கிராமியக் கலைக்குழு பயிற்சி முகாம், Isha kiramiya payirchi mugaam
ஈஷா கிராமியக் கலைக்குழு பயிற்சி முகாம், Isha kiramiya payirchi mugaamஈஷா கிராமியக் கலைக்குழு பயிற்சி முகாம், Isha kiramiya payirchi mugaam
சதுரங்கப் போட்டிTeekay Tourney என்ற அமைப்பு, பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டியை தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடத்தியது. 200க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் 6 தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். ஈஷா வித்யா பள்ளியின் சார்பாக 6ம் வகுப்பைச் சேர்ந்த ஜெய மாதவ ராஜா போட்டியில் 7ம் பரிசை பெற்றார்.

ஈஷா வித்யாவில் சதுரங்கப்போட்டி, Isha Vidhyavil sathurangap pottiஈஷா வித்யாவில் சதுரங்கப்போட்டி, Isha Vidhyavil sathurangap potti
உயிர்நோக்கம் ஆசிரியர் பயிற்சிமே 14 முதல் 21ம் தேதி வரை "உயிர்நோக்கம்" ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் 170 பேர் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

உயிர்நோக்கம் ஆசிரியர் பயிற்சி, Uyir nokkam aasiriyar payirchi
உயிர்நோக்கம் ஆசிரியர் பயிற்சி, Uyir nokkam aasiriyar payirchiஉயிர்நோக்கம் ஆசிரியர் பயிற்சி, Uyir nokkam aasiriyar payirchi
தியானலிங்கம் முன் சிவதாண்டவம்சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த "கோசை நகரான் திருக்கையிலாய திருக்கூட்டம்" என்ற அமைப்பைச் சேர்ந்த 55 பேர் கொண்ட குழு, தியானலிங்கத்திற்கு வருகைத் தந்து, தேவாரம் மற்றும் திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ள இசை வாத்தியங்களைக் கொண்டு சிவவாக்கியம் மற்றும் பிற சைவ மரபுப் பாடல்களைப் பாடி தியானலிங்கத்திற்கு அர்ப்பணித்தனர்.

தியானலிங்கம் முன் சிவதாண்டவம், Dhyanalingam mun shiva thandavam
தியானலிங்கம் முன் சிவதாண்டவம், Dhyanalingam mun shiva thandavamதியானலிங்கம் முன் சிவதாண்டவம், Dhyanalingam mun shiva thandavam
தியானலிங்கம் முன் சிவதாண்டவம், Dhyanalingam mun shiva thandavamதியானலிங்கம் முன் சிவதாண்டவம், Dhyanalingam mun shiva thandavam
கோவை ஜாகீர்நாயக்கன்பாளையத்தில் மரம் நடுவிழாகோவை தொண்டாமுத்தூர் ஜாகீர்நாயக்கன்பாளையத்தில் மே 19ம் தேதி மரம் நடுவிழா நடைபெற்றது. ஈஷா பசுமைக் கரங்களுடன் இணைந்து மஹாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களின் துணையோடு, சாலையோரங்களில் 400 மரக்கன்றுகள் நடப்பட்டது. மரத்தை பாதுகாக்கும் வேலிக் கம்பிகளையும், மரக்கன்றுகளுக்கான தண்ணீரையும் கோவை ஆட்சியர் அலுவலகம் நன்கொடையாக வழங்கியது. தொண்டாமுத்தூர் ஒன்றிய பஞ்சாயத்துத் தலைவரான திருமதி. பிரேமலதா செல்வராஜ், துணைத் தலைவர் திரு. ராமசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர்.

AnandaAlai-ProjectGreenHands-25thMay2014-1