சத்குருவுடன் யந்திர வைபவம்
டிசம்பர் 16ம் தேதி - பௌர்ணமி இரவன்று யந்திர வைபவம் நடைபெற்றது. லிங்க பைரவி யந்திரங்களையும், அவிக்ன யந்திரங்களையும் சத்குரு பிரதிஷ்டை செய்ய, அவரிடம் அதை நேரடியாக 139 பேர் பெற்றுக்கொண்டனர்.
ஈஷாவில் நடந்தவை......

ஈஷாவில் நடந்தவை.....

21 வார ஹடயோகாவின் நிறைவு

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜூலை 18, குரு பௌர்ணமியன்று ஆரம்பித்த 21 வார ஹடயோகா ஆசிரியர் பயிற்சி, டிசம்பர் 16ம் தேதியன்று நிறைவுபெற்றது. உபயோகா, அங்கமர்தனா, ஆசனா போன்ற பாரம்பரிய யோகப் பயிற்சியை கற்றுக் கொண்ட இந்த 75 பேரும், ஈஷா சான்றிதழோடு தங்கள் ஊரில் மக்களுக்கு இதை முறையாகக் கற்றுத்தர மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ருஷ்யா, ஃபிரான்ஸ், ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய இடங்களில், நம் ஊர் உள்பட, கூடிய சீக்கிரம் பாரம்பரிய ஹட யோகா பயிற்சிகள் முறையாக மக்களை சென்றடையும் என்று நம்பலாம்.
ஈஷாவில் நடந்தவை.........

கூடங்குளத்தில் ஒரு புதிய ஈஷா தியான மையம்

 

ஈஷா கூடங்குளம் சார்பாக, ஒரு புதிய தியான மண்டபம் 08.12.13 அன்று திறக்கப்பட்டது. 2 வருடங்களே ஆன இந்த சிறிய மையத்தில் தன்னார்வ தொண்டர்களின் அர்ப்பணிப்பாலும், ஈடுபாட்டாலும் 2300 சதுர அடியில் தனது சொந்த தியான மண்டபத்தை ஒரே மாதத்தில் உருவாக்கி முடித்தனர். இந்த திறப்பு விழாவில் 150 க்கும் மேற்ப்பட்ட தியான அன்பர்கள் கலந்து கொண்டனர். இந்த மையத்தில் தொடர்து ஈஷா யோகா வகுப்புகளும், மாதாந்திர சத்சங்கங்களும் நடைபெறும். ​
ஈஷாவில் நடந்தவை..........

தினமலர் விவசாயக் கண்காட்சி

 

டிசம்பர் 19 - 22 தேதிகள் வரை தஞ்சாவூரில் உள்ள நகராட்சி மைதானத்தில், தினமலர் நடத்தும் விவசாயிகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மத்தியில் மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பசுமைக் கரங்களின் விழிப்புணர்வு மையம் மூலமாக மரக் கன்றுகள் விநியோகமும் நடைபெற்று வருகிறது.
ஈஷாவில் நடந்தவை...

ஈஷாவில் நடந்தவை....