ஈஷாவில் நடந்தவை...
ஈஷாவின் செயல்பாடுகள் நிற்காமல் வருடம் முழுக்க நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி நடந்த நிகழ்வுகளில் சிலவற்றை உங்களுக்காக இங்கே பதிவிக்கிறோம்.
 
 

சென்னை நங்கநல்லூரில் சாதனா ஹால்

சென்னை நங்கநல்லூர், ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் 5 வருடக் கனவு தற்சமயம் நிஜமாகியுள்ளது. தியான அன்பர்கள் கூடி யோகப்பயிற்சிகள் செய்யவும், சத்சங்கங்கள் நடக்கவும் ஒரு மையத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். தங்கள் தினசரி பயிற்சிகளுக்காக இவ்விடத்தைப் அனைத்து தியான அன்பர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முகவரி: ஈஷா யோகா மையம், 7, நேரு காலனி 10வது தெரு, பழவந்தாங்கல், சென்னை-61
தொ.பே: 9444911747

2

1

கார்ப்பரேட் வகுப்பு

Accenture Consulting Group நிறுவனத்திலிருந்து, மேலாண்மை மற்றும் மண்டல இயக்குனர்கள் 27 பேர் ஈஷா யோகா மையத்தில் நடந்த நிறுவனங்களுக்கான யோக வகுப்பில் கலந்து கொண்டனர். ஜூலை 10-13 தேதிகளில் நடந்த இந்த வகுப்பில், பாரம்பரிய யோக முறைகளான உப-யோகா, சூரியசக்தி க்ரியா மற்றும் ஈஷா க்ரியாவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. சத்குருவின் திடீர் வருகையும், அவருடனான கேள்வி-பதில் நேரமும் இவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது.

4
5
3

குதிரையேற்றம்

ஈஷா ஹோம் ஸ்கூலின் 5ம் வகுப்பு மாணவர்கள், கோவையில் அமைந்துள்ள யுனைடெட் ராயல் ரைடர்ஸ் குதிரையேற்ற மையத்திற்கு ஜூலை 4ம் தேதி சென்றனர். குதிரைகளின் வகைகள் பற்றியும், அதன் வளர்ப்பு முறைகளைப் பற்றியும் அவர்கள் தெரிந்து கொண்டதோடு, மிகுந்த உற்சாகத்துடன் குதிரை சவாரியும் மேற்கொண்டனர்.

நன்மை உருவம்

ஜூலை 20ம் தேதி, "ஈஷாங்கா - சத்குருவுடன் 7% கூட்டு" வைத்துள்ளவர்களுக்கு நன்மை உருவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1800 பேர் கலந்துகொண்டு சத்குருவிடமிருந்து நன்மை உருவம் பெற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து சத்குருவின் சத்சங்கமும் நடைபெற்றது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1