ஈஷா அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டத்தினால் பயன்பெற்ற கோவை அரசுப் பள்ளி, ஆன்மீகக் கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள் போன்ற நிகழ்வுகளை இங்கே உங்களுக்காக பதிகிறோம்...

ஆன்மீகக் கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீகக் கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள், Aanmeega kankaatchiyil isha pasumai karangal

ஜூலை 8-14 தேதிகள் வரை சென்னையில் நடந்த ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் சார்பில் பல அரிய வகை மரக்கன்றுகளான தேக்கு, பலா, சீதா, தாண்றிக்காய், இன்சுலின், எலைபுரசு, மந்தாரை, பூவரசு, செஞ்சந்தனம், நாவல், மூங்கில் ஆகியவை காட்சியப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியில், பசுமைக் கரங்கள் திட்டத்தைப் பற்றின விழிப்புணர்வு பிரசுரங்களும், 1000 மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டது.

அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டம்

அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டம், Government school adoption program

ஈஷா அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டம் சார்பாக தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளுள் ஒன்றான கோவை கல்வீராம்பாளையம் அரசுப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்கள் 118 பேரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி ஆரம்பித்து 20 வருடங்களில், மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்திருப்பது இதுவே முதல்முறை.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் பள்ளியின் 100% தேர்ச்சிக்கு உதவியாக இருந்த ஈஷா அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டத்தின் ஆசிரியர்களுக்கும், ஈஷாவிற்கும் நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார்.