இந்த வார ஈஷாவில் நடந்தவையில், பெருந்துரையில் ஆரம்பிக்கப்பட்ட பசுமை இயக்கம் பற்றியும், தூத்துக்குடி ஈஷா குடும்பத் திருவிழா பற்றியும் ஒரு பார்வை...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"பசுமை பெருந்துறை" இயக்கம்

pasumai-perundurai-iyakkam-2

pasumai-perundurai-iyakkam-3

பெருந்துறை பேரூராட்சி நிர்வாகம் ஈஷா பசுமைக் கரங்களுடன் கைகோர்த்துள்ளது. மரம் நடுதல் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 9 ம் தேதியன்று, ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில், பல்வேறு தரப்பு மக்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதை அடுத்து ஆகஸ்ட் 10 ம் தேதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. N.D தோப்பு வெங்கடாசலம் அவர்கள், "பசுமை பெருந்துறை" திட்டத்திற்கான முதல் மரக்கன்றை நட்டுத் துவக்கி வைத்தார். ஊரில் அமைந்துள்ள பள்ளிகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு நகரையே பசுமையாக்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம். அதன் ஆரம்பமாக, இந்த வருடம் 20,000 மரக்கன்றுகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, பேரூராட்சி நிர்வாகத்தில் ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பாதுகாப்பது, நீர் ஊற்றுவது, தேவைப்பட்டால் மறு நடவு செய்வது போன்ற செயல்களுக்கு இக்குழு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் ஈஷா குடும்பத் திருவிழா

Tuticorin-isha-kudumba-thiruvizha-1

Tuticorin-isha-kudumba-thiruvizha-1

தூத்துக்குடி ஈஷா மையத்தின் 10வது வருட நிறைவை முன்னிட்டு, ஜூலை 20ம் தேதியன்று "ஈஷா குடும்பத் திருவிழா"வை மிக சிறப்பான முறையில் தன்னார்வத் தொண்டர்கள் கொண்டாடினர். மாலை 3.30 மணியிலிருந்து 8.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து 1700 தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுடன் ஆரம்பித்து, சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சி, தன்னார்வத் தொண்டர்களின் பகிர்தல்கள், என்று தொடர்ந்து இரவு உணவுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.