1

42 நாட்கள் ஷிவாங்கா சாதனா, மார்ச் 11ம் தேதி நிறைவு பெற்றது. மஹாசிவராத்திரியின் மறுநாள் காலை 6000 ஷிவாங்காக்கள், வெள்ளியங்கிரியின் ஏழாவது மலைக்கு பயணம் செய்தனர். மலையேற்றம் முடிந்த பிறகு, மாலை 6.15 மணிக்கு ஆதியோகி ஆலயத்தில் சத்குருவின் தரிசனத்தில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இந்த ஷிவாங்கா சாதானா எல்லோருக்கும் ஒரு அரிய பரிசாக அமைந்தது.

2

மார்ச் 14ம் தேதி புது டில்லியின் வில்ஸ் லைப் ஸ்டைல் இந்தியா நிறுவனத்தின் ஃபேஷன் வார நிகழ்ச்சியில் சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் துள்ளலான மத்தள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பு கலைஞரான தருன் தாஹிலனியின் ஃபேஷன் ஷோவில் இது இடம்பெற்றது.

தருன் தாஹிலனி, சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் பெரிய ரசிகர். தாஹிலனி "நான் ஈஷாவிற்கு சென்று வந்தேன். அங்கே சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசையை கேட்டு மெய்மறந்திருக்கிறேன். அதன் பிறகுதான், என் நிகழ்ச்சிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று முடிவுசெய்தேன்" என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.