ஈஷாவில் நடந்தவை…
நாடுகள் கடந்து மக்களை சென்றடையும் ஈஷா யோகாவைப் பற்றியும், புதிதாக உதயமாகியுள்ள ஈஷா தியான மண்டபம் பற்றியும் இந்த வார 'ஈஷாவில் நடந்தவை'யில், இங்கே உங்களுக்காக...
 
 

Happenings - inside

ஈஷா KMCH தியான மண்டபம்கோவை அவினாசி ரோட்டில் அமைந்துள்ள கோவை மெடிகல் சென்டர் (KMCH) மருத்துவமனையில் ஈஷாவும் KMCHம் இணைந்து "ஈஷா KMCH தியான மண்டபம்" என்ற பெயரில் புதிதாக ஒரு தியான மண்டபத்தை உருவாக்கியுள்ளன. சென்ற வாரம் டிசம்பர் 7ம் தேதியன்று திறக்கப்பட்ட அம்மண்டபத்தில் வைத்து, மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும், தினமும் மாலை 5 மணிக்கு ஈஷா கிரியா இலவச தியானம் கற்றுத்தரப் படுகிறது. மேலும் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஈஷா யோகா 7 நாட்கள் வகுப்புகள் இங்கே நடைபெறும்.

uganda

உகாண்டாவில் ஈஷா யோகாஅக்டோபர் 23 முதல் 29ம் தேதிவரை, உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவில் 3வது முறையாக 7 நாட்கள் இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு நடைபெற்றது. விவசாயிகளிலிருந்து தொழிலதிபர்கள் வரை, பலதரப்பட்ட கலாச்சாரம், மதம் மற்றும் பொருளாதாரப் பின்னணியிலிருந்து மொத்தம் 99 பேர் இந்த வகுப்பில் கலந்து கொண்டனர். ஈஷாவின் மைல்கல்லில் இதுவும் ஒன்று.

pasumai 1

பரவி வரும் 'பசுமைத் தாம்பூலம்'டிசம்பர் 8ம் தேதி செங்கல்பட்டில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும், ஈஷா பசுமைக் கரங்கள் மூலமாக, சுமார் 1000 மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.
 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

my long time dream is to have isha meditation centres in hospitals !! hats off kmch !! :)