ஈஷாவில் நடந்தவை…
தமிழ்நாட்டில் பசுமை விழிப்புணர்வை மக்களிடையே தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நம் பசுமைக் கரங்கள் திட்டம் இந்த வாரம் மேற்கொண்ட இரண்டு முக்கிய செயல்கள் உங்கள் பார்வைக்கு...
 
 
AnandaAlai-GreenHands-15thSep2013-10 AnandaAlai-GreenHands-15thSep2013-11

AnandaAlai-GreenHands-15thSep2013-12

1500 மரக்கன்றுகள்

சென்னை L&T Construction நிறுவனத்தில் இயங்கி வரும் பசுமைக் கரங்கள் குழுவினர், தஞ்சாவூரில் அமைந்துள்ள கீழவாசல் சாவடி கிராமத்தின் "தாய்மண்" அமைப்பினருடன் சேர்ந்து பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தினர். செப்டெம்பர் 8ம் தேதி நடந்த இந்நிகழ்ச்சியில், L&T யினால் உருவாக்கப்பட்ட நர்சரியிலிருந்து 1500 மரக்கன்றுகள் "தாய்மண்" அமைப்பினருக்கு வழங்கப்பட்டது. மாவட்ட வனத்துறை அதிகாரிகளான திரு.டி.ரெங்கநாதன் மற்றும் திரு.செல்வம் அகிய இருவரும் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். அதே நாளில், அந்த கிராம் மக்கள், கிராம தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் ஒன்றிணைந்து 300 மரக்கன்றுகளை நட்டனர்.

AnandaAlai-GreenHands-15thSep2013-13 AnandaAlai-GreenHands-15thSep2013-14

AnandaAlai-GreenHands-15thSep2013-5

தினமலர் கண்காட்சியில் பசுமைக்கரங்கள்

வேலூரிலுள்ள கோட்டை மைதானத்தில் நடந்த தினமலர் வேளாண் மற்றும் நுகர்வோர் கண்காட்சியில், பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் 2000 மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1