பசுமைப் பள்ளி இயக்கத்தை சேலத்தில் தொடங்கிய ஈஷா பசுமைக் கரங்கள், ஈஷா வித்யாவிற்காக முதன் முதலாக மாரத்தான் ஓடிய ஆஸ்திரேலிய தன்னார்வத் தொண்டர்கள் என விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...

சேலத்தில் பசுமைப் பள்ளி இயக்கம்

selathil-pasuai-palli-iyakkam-1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

selathil-pasuai-palli-iyakkam-2

selathil-pasuai-palli-iyakkam-3

சேலம் மாவட்ட கல்வித்துறையும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமும் இணைந்து சேலத்தில் பசுமைப் பள்ளி இயக்கத்தை ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று துவக்கினர். சேலம் லிட்டில் ஃப்ளவர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற துவக்க விழாவில், 450 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்துகொண்டனர். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் திரு.செல்வக்குமார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மர விதைகளை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும் சேலம் மாவட்ட கல்வி அதிகாரி திரு. ராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் (DEO) செல்வி.இந்திரா காந்தி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் கண்காணிப்பாளர் (IMS) திரு.வெங்கடாஜலபதி, ஷிஷிமின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) செல்வி. உஷா ஆகியோர் நிகழ்ச்சியை உடனிருந்து சிறப்பித்தனர். இத்திட்டத்தில் 450 பள்ளிகளிலிருந்து சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்கின்றனர். சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த பசுமைப் பள்ளி இயக்கத்தின் மூலம் 9 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி நடுவதற்கான முயற்சியில் மாணவர்கள் இறங்கியுள்ளனர்.

ஈஷா வித்யாவிற்காக ஆஸ்திரேலியாவில் மாரத்தான் ஓட்டம்

marathon-for-ishavidhya-in-australia-1

marathon-for-ishavidhya-in-australia-2

ஜூலை 27ம் தேதி - ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 15 ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஈஷா வித்யா பள்ளிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில், "Run Melbourne 2014" என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த 15 கி.மீ மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டனர். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த இதுபோன்ற ஓட்டங்களில் இவர்களில் பலர் பல காரணங்களுக்காக பங்கேற்றிருந்தாலும், ஈஷா வித்யாவிற்கு நிதி திரட்டும் நோக்கத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.