ஈஷாவில் நடந்தவை…
இந்த வார ஈஷாவில் நடந்த நிகழ்வுகளிலிருந்து சில உங்களுக்காக இங்கே..
 
 

5

கோவை ஏரி சுத்தப்படுத்தும் பணி

கோவை மாநகராட்சி உட்கோட்டப் பகுதியில் அமைந்துள்ள உக்கடம் ஏரியைத் தூர்வாரும் பணியில் ஜூன் 9ம் தேதி, பல தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன. ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள் 200 பேர் இதில் கலந்துகொண்டனர்.

4

பெங்களூரு மாரத்தான்

ஈஷா வித்யா பள்ளியின் ஆதரவாளர்கள், பள்ளி குழந்தைகளின் ஊக்கத் தொகை, பாடப் பொருட்கள் மற்றும் பள்ளியின் கட்டிட மேம்பாட்டிற்காக, உலகின் பல பகுதிகளில் நடக்கும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு நிதி திரட்டி வருகிறார்கள். அதன் வழியில், தர்மபுரியில் வரவிருக்கும் பள்ளிக்காக, பெங்களூருவில் மே 19ம் தேதி நடந்த "TCS Bangalore World 10km Run" மாரத்தான் ஓட்டத்தில், 40 அன்பர்கள் கலந்துகொண்டு 10 கி.மீ தூரத்தை ஓடிக்கடந்தனர்.

1
2

உலக சுற்றுச் சூழல் தினம்

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி தமிழகத்தின் 23 ஈஷா மையங்களில் நடந்த, இந்த வருடத்திற்கான 40 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தின் துவக்க விழாவில் 10000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அன்று மட்டும் 15,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

3

ஹைத்ராபாத்தில் ஈஷா ஷாப்பீ

புத்தகங்கள், 'டிவிடி'க்கள், ஆர்கானிக் ஃபைபர் ஆடைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் சுவையான உணவுப் பொருட்கள் போன்ற பன்முகத் தயாரிப்புகளைக் கொண்ட ஈஷா ஷாப்பி புதிதாக ஹைத்ராபாத் நகரில் உதயமாகியுள்ளது.
முகவரி: ஈஷா ஷாப்பி
ஃபுட் வேல்டு எதிரில்,
மேற்கு மரேடப்பள்ளி,
செகந்திராபாத் - 500026
தொடர்புக்கு: 9966199610.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1