ஈஷாவில் நடந்தவை...
சத்குருவின் சத்சங்கம்... அவர் உருவாக்கிய திட்டங்கள் காணும் வெளிப்பாடுகள் என ஈஷாவில் நடந்த நிகழ்வுகள் இங்கே உங்களுக்காக...
 
 

4
5

சத்குருவுடன் ஒரு சத்சங்கம்

ஜூன் 29 மாலை, ஹைத்ராபாத் தியான அன்பர்களுக்கு, சத்குருவுடன் நடந்த சத்சங்கம் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தது. வெளியே மழைப் பொழிய, அங்கே கூடியிருந்த 1200 தியான அன்பர்களும் உள்ளே குருவின் அருள் மழையில் நனைந்தனர்.

1
2
3

ஈஷா மருத்துவமனை ஆண்டு விழா

சேலம் ஈஷா மருத்துவமனையின் 6வது ஆண்டு விழா, ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இதை ஒரு கிராமத் திருவிழாவாகவே அங்குள்ள கிராம மக்கள் கொண்டாடினர். பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன.

மரக்கன்றுகள் விநியோகம்

கோவை - அவினாசி சாலை கிளை லிமிசி முகவர்கள் சங்கத்தின் ஆண்டு மகாசபை கூட்டம் ஜூன் 25ம் தேதி கோவை ஆருத்ரா ஹாலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 200 பேரும், ஈஷா பசுமைக் கரங்கள் சார்பாக மரங்களைப் பற்றின விழிப்புணர்வு பெற்று, மரக்கன்றுகள் பெற்றுச் சென்றனர்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1