ஈஷாவில் நடந்தவை…
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், வில்வித்தையில் கலக்கிவரும் ஈஷா வித்யா பள்ளி மாணவர் போன்ற தகவல்களுடன் விரிகிறது இந்த வார ஈஷா...
 
 

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், வில்வித்தையில் கலக்கிவரும் ஈஷா வித்யா பள்ளி மாணவர் போன்ற தகவல்களுடன் விரிகிறது இந்த வார ஈஷா...

சத்குருவுடன் நன்மை உருவம் நிகழ்ச்சி

சத்குருவுடன் "ஈஷாங்கா - 7%" கூட்டு வைத்துக் கொண்டவர்களுக்கு, நன்மை உருவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று(ஆகஸ்ட் 2) ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் 2300 பேர் சத்குருவிடமிருந்து நன்மை உருவம் பெற்றுக் கொண்டனர்.

ஈஷா வித்யாவில் ஆடிப்பெருக்கு

தமிழகத்தில் இன்று அனைவரும் ஆடிப்பெருக்கு விழாவைக் கெண்டாடிக்கொண்டிருக்க, கோவை ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் நேற்று முன் தினமே(ஆக 1) இதை பள்ளி வளாகத்தில் கொண்டாடினர். தங்கள் பள்ளியில், அணை, மதகு, ஆறு போன்ற அமைப்புகளை உருவாக்கி நம் வாழ்வாதரமான தண்ணீருக்கு மலர்கள் அர்ப்பணித்து தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

வில்வித்தையில் கலக்கும் கார்த்திகேயன்

சேலம் வனவாசியில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவரான திரு. கார்த்திகேயன் மும்பையில் நடந்த தேசிய உள்ளரங்க வில்வித்தைப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வரும் அக்டோபர் 30 நவம்பர் 1 தேதிகளில், இத்தாலி நாட்டில், சர்வதேச கள வில்வித்தை அமைப்பின் சார்பாக நடத்தப்படவிருக்கும் "ஐரோப்பிய உள்ளரங்க வில்வித்தை சாம்பியன்ஷிப்" போட்டியில் இந்திய அணி சார்பாக கார்த்திகேயன் கலந்துகொள்ளப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஈஷா மையத்தில் குழந்தைகள் வகுப்பு

Isha Happenings - America isha yoga maiyathil kulanthaigal vaguppu -1

அமெரிக்கா ஈஷா உள்நிலை மையத்தில் ஜூலை மாதம் 19 - 26 தேதி வரை குழந்தைகளுக்கான ஈஷா யோகா வகுப்பு நடைபெற்றது. இதில் 7-14 வயதுக்குட்பட்ட 100 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

பசுமைக் கரங்களில் தன்னார்வத் தொண்டு

Isha Happenings - Pasumai karangalil thannarva thondu-2

Isha Happenings - Pasumai karangalil thannarva thondu-1

சென்னை ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணையில், சென்னை Hewlett-Packard (HP)  கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர்கள் 20 பேர் ஜூலை 3ம் தேதியன்று தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டனர். முன்னதாக இவர்களுக்கு மரம் நடுதல், விதை விதைத்தல், மண் உரம் கலவை தயாரித்தல் ஆகியவைகளை பற்றி விரிவாக கற்றுக் கொடுக்க்கப்பட்டது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1