ஈஷா யோக மையத்தில் நடந்த கொண்டாட்டங்கள், தேவியின் அருட்பார்வை கிட்டிய காரைக்குடி, சத்குரு ஸ்ரீபிரம்மா கல்வி உதவித்தொகை என ஈஷாவில் நடந்தவற்றை இதோ உங்கள் முன் கொண்டு வருகிறோம்...


ஈஷாவில் கோகுலாஷ்டமி

ஆகஸ்ட் 28 அன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் கோகுல வாசம் பூண்டிருந்தது. உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், போன்ற போட்டிகளும், கிருஷ்ணனைப் போலவே ஆடையணிந்து வந்து தங்கள் கரங்களால் கூடியிருந்தவர்களுக்கு வெண்ணெயை பரிமாறிய குழந்தைகளும் இக்கொண்டாட்டத்திற்கு அழகு சேர்த்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காரைக்குடியில் தேவியின் அருட்பார்வை

ஆகஸ்ட் 14ம் தேதி, காரைக்குடி செக்காலை ரோட்டில் அமைந்துள்ள ஐயப்பா டெக்ஸ்டைல்ஸின் 2வது மாடியில் "தேவியின் கண்கள்" திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ம் தேதி ஆடி வெள்ளியை முன்னிட்டு, காரைக்குடி ஸ்ரீ ராமநவமி திருமண மண்டபத்தில் பெண்கள் பலர் ஒன்றுகூடி லிங்கபைரவி ஸ்துதியை 108 முறை உச்சரித்து தேவியை வழிபட்டு அருள்பெற்றனர்.

ஈஷா சமஸ்கிருதியின் சமஸ்கிருத தினம்

ஆகஸ்ட் 19ம் தேதி, ஈஷா சமஸ்கிருதி குழந்தைகளால் சமஸ்கிருத தினம் ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்டது. சமஸ்கிருத தினம் என்பது, இந்தியாவின் பல பகுதிகளிலும், வெளிநாடுகள் சிலவற்றிலும், சமஸ்கிருத மொழியைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படும் கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்று. ஈஷாவின் பிரம்மச்சாரிகளும், பிற ஆசிரமவாசிகளும் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, இசை, நடனம், நாட்டிய நாடகம் என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சமஸ்கிருத மொழியிலேயே நடத்திக் காட்டி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் நம் சமஸ்கிருதி குழந்தைகள்.

சத்குரு ஸ்ரீபிரம்மா கல்வி ஊக்கத்தொகை

ஈஷா அறக்கட்டளை சார்பில், சத்குரு ஸ்ரீபிரம்மா கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகஸ்ட் 23ம் தேதி கோவை ஆலாந்துறையில் நடைபெற்றது. விழாவில், திரு எஸ்.பி.வேலுமணி MLA அவர்கள் கலந்துகொண்டு 395 கல்லூரி மாணவர்கள் மற்றும் 495 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 890 மாணவ மாணவியர்களுக்கு ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.