காலபைரவருக்கு நன்றி செலுத்தும் "காலபைரவ அஷ்டமி", ஈஷாவின் "ஸ்வச் பாரத்" பணி பற்றிய தகவல்களுடன் இந்த வார ஈஷாவில் நடந்தவை...

காலபைரவ அஷ்டமி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வருடா வருடம் ஈஷாவில் கொண்டாடப்படும் காலபைரவ அஷ்டமி, இந்த வருடம் நவம்பர் 14ம் தேதியன்று கொண்டாடப்பட்டது. ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள நிர்காய ஸ்தானத்திலும் (காலபைரவ கர்மா செய்யுமிடம்), கோவை மாநகரில் அமைந்துள்ள காயாந்த ஸ்தானத்திலும் (ஈஷா சுடுகாடு) இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் மந்திர உட்சாடனையைத் தொடர்ந்து, காலபைரவருக்கு ஆரத்தியும் நடைபெற்றது.

ஈஷா வித்யாவின் "ஸ்வச் பாரத்"

கடலூர் ஈஷா வித்யா பள்ளி சாரணர் படை மாணவர்கள் இணைந்து இந்திய பிரதமர் திரு. மோடி அவர்களின் கனவுத் திட்டமான "ஸ்வச் பாரத்" (தூய்மை இந்தியா) திட்டத்தில் பங்குபெற்றனர். பள்ளி அமைந்துள்ள கடலூர் - மடவப்பள்ளம் கிராமத்தில் அக்டோபர் 8ம் தேதியன்று 25 மாணவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். அங்குள்ள குப்பைகளை இவர்கள் அகற்ற, இதைப் பார்த்த அந்த கிராம மக்களும் இந்தப் பணியில் இவர்களுடன் இணைந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி காலனி - தூய்மைப் பணி

ஈஷா பிரம்மச்சாரிகளும், ஆசிரமவாசிகளும் சேர்ந்து, ஈஷாவின் அருகில் உள்ள செம்மேடு, காந்தி காலனி, இருட்டுப் பள்ளம் ஆகிய கிரமங்களை தூய்மைப்படுத்தும் பணியை இன்று (நவ.23) தொடங்கினர். சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்தப்பணி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. தூய்மைபடுத்துதல் மட்டுமன்றி, அந்த கிராம மக்களுக்கு சுற்றுப்புற சூழலைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பிளாஸ்டிக் பைகளையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் சேகரிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை, வாரம் ஒருமுறை ஈஷாவிற்கு எடுத்து வந்து ஆக்கபூர்வமாக மறுசுழற்சி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.