நம் இந்திய ராணுவ வீரர்களே உண்மையான ஹூரோக்கள். அவர்கள் முன்பின் தெரியாத நமக்காக தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் பிரிந்து தசைகளை ஊடுருவி எலும்பை உருக்கும் கடுங்குளிரில் பணியாற்றுகின்றனர்.

உறைப்பனி சூழ்ந்த பனிச் சிகரங்களிலும் அவர்கள் பணியாற்றுகின்றனர். பல நாட்கள் பதுங்கு குழிகளிலேயே தங்கியிருக்க வேண்டும். இதனால், அவர்கள் உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதை சமாளித்து உள்ளத்தை உறுதியாக வைத்துக்கொள்ள யோகா உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன்.

நம் இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் ‘யோகா’ என்னும் அற்புதமான ஆயுதத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்தப் பணியைத்தான் ஈஷா யோகா மையம் செய்து வருகிறது.

hatayoga-for-indian-army-at-isha

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 64 ராணுவ வீரர்கள் கடந்த மாதம் ‘ஹட யோகா’ கற்பதற்காக கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்தனர். அந்த குழுவில் மேஜர் ரேங்கிலான அதிகாரிகளும், ஜே.சி.ஓ. அதிகாரிகளும் அடங்குவர். அவர்களுக்கு அங்கமர்த்தனா, சூர்ய க்ரியா, உப-யோகா, 'ஆஉம்' மந்திர உச்சாடனை, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. நவம்பர் 15-ம் தேதி முதல் நவம்பர் 29-ம் தேதி வரையிலான 2 வார காலம் அவர்களின் வாழ்வில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இதோ அவர்களே தங்கள் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்…

மேஜர் விஷால் ஹூடா:

hatayoga-for-indian-army-at-isha-major-vishal-hooda

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாரம்பரிய ஹட யோகா பயிற்சிகளை ஈஷாவில் கற்றுக்கொண்டதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். இங்கு தங்கியிருந்த 15 நாட்களும் மிக அற்புதமாக இருந்தது. யோகா செய்யும்போது உடலின் பாரம் குறைவதை நன்றாக உணர முடிந்தது. சில ‌ஷணங்களில் உடலே இல்லாமல் இருப்பதைப்போல் உணர்ந்தேன். சுஷாந்தி தியானம் செய்துவிட்டு கண் திறக்கும்போது, மீண்டும் புதிதாக பிறந்தது போல் உணர்ந்தேன். சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இடம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. அந்த சக்தி அதிர்வுகளையும் என்னால் நன்கு உணர முடிந்தது.

நமது ராணுவ வீரர்கள் பல்வேறு கடுமையான சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். உறைப்பனி சூழ்ந்த பனிச் சிகரங்களிலும் அவர்கள் பணியாற்றுகின்றனர். பல நாட்கள் பதுங்கு குழிகளிலேயே தங்கியிருக்க வேண்டும். இதனால், அவர்கள் உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதை சமாளித்து உள்ளத்தை உறுதியாக வைத்துக்கொள்ள யோகா உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன். வெறும் 6-க்கு 6 அடி இடம் இருந்தால் போதும். அங்கமர்த்தனாவும், உப-யோகாவும் செய்துவிடலாம். ஈஷாவில் கற்றுக்கொண்ட சக்திவாய்ந்த யோகா பயிற்சிகள் ’ராமரின் வில்-அம்பை’ போன்று எங்களைப் பாதுகாக்கும்.

எங்களுக்கு எங்களை விட இந்த ராணுவ உடையும், இந்த தேசமும்தான் உயர்வானது. ஈஷா தன்னார்வலர்களும் எங்களை போலவே சேவையாற்றுகின்றனர். அவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் அதை அவர்களை விட உயர்வாக கருதி மிக சிறப்பாக செய்கின்றனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

மேஜர் நிதின் ஜோஷி:

hatayoga-for-indian-army-at-isha-major-nithin-joshi

ஈஷாவை நான் சொர்க்கமாக கருதுகிறேன். எல்லையற்ற ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் நான் இங்கு உணர்ந்தேன். சத்குருவின் அருளால் இந்த இடமும் இங்கு வாழும் மக்களும் உள்ளும் புறமும் தூய்மையாக இருப்பதைப் பார்க்கிறேன்.

தியானலிங்கம் எந்த மதத்தையும் சாராமல் இயற்கையுடன் எங்களை ஒன்றிணைத்தது. லிங்கபைரவில் நிகழ்ந்த ஆரத்தி என்னை மிகவும் கவர்ந்தது. சூர்ய குண்டம் மிகவும் சக்திவாய்ந்த இடமாக உள்ளது. பிக்ஷா ஹாலில் நாங்கள் உண்ட உணவு கடவுளுக்கு அர்ப்பணிக்கும் பிரசாதம் போல் இனிமையாக இருந்தது. இங்கு கற்றுக்கொண்ட ஹட யோகா எங்களுக்கு ஏராளமான பலன்களை தரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ராம் நாராயணன் குஜ்ஜார் (ராணுவ உடற்கல்வி பயிற்சியாளர்) ராஜ்பூட் ரெஜிமென்ட்:

hatayoga-for-indian-army-at-isha-Ram-Narayan-Gujjar

யோகா கற்பதற்கு ஈஷாவுக்கு வந்தததை எனக்கு கிடைத்த சிறப்பான வாய்ப்பாக கருதுகிறேன். ராணுவ உடற்கல்வி பயிற்சியில் யோகாவையும் சேர்ப்பதன் மூலம் வீரர்களின் மன உறுதி அதிகரிக்கும். எளிதில் கோபம் அடையும் தன்மை கொண்ட ராணுவ வீரர்களுக்கு யோகா நன்கு பயன் தரும்.

‘இந்த ஷணம் தவிர்க்க முடியாதது’ என்று சத்குரு கூறிய உண்மையை நான் இந்த யோகா வகுப்பில் கற்ற மிகப்பெரிய பாடமாக கருதுகிறேன். சத்குருவின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நான் வீட்டுக்குச் சென்றதும் என்னுடைய மனைவிக்கும், பெற்றோருக்கும் சத்குருவின் வீடியோக்களை காண்பிப்பேன். சக்திவாய்ந்த அங்கமர்த்தனாவை எனக்கு கற்றுக்கொடுத்ததற்காக சத்குருவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரபுதேவா (எம்.ஆர்.சி வெலிங்க்டன்):

hatayoga-for-indian-army-at-isha-Prabhu-Deva

நான் என் வாழ்வில் இதற்கு முன்பு யோகா செய்தது கிடையாது. முதல்முறையாக ஈஷாவுக்கு வந்துதான் யோகா கற்றுள்ளேன். எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டில் அதிகம் ஆர்வம் உண்டு. இந்த 2 வார ஹட யோகா பயிற்சியை முடித்த பிறகு யோகா மீதும் எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நான் எனது ராணுவ முகாமுக்கு திரும்பியதும் கட்டாயம் தினமும் யோகா செய்வேன்.

நான் ஒரு நாள் கூட அசைவம் இல்லாமல் உணவு உண்டது இல்லை. சைவம் என்றாலே எனக்கு பிடிக்காது. ஆனால், கடந்த 15 நாட்கள் முழு சைவ உணவு மட்டுமே உண்ணும் நிலை ஏற்பட்டது. சைவ உணவில் போதிய சத்து இல்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த நம்பிக்கையில் உண்மையில்லை என்பதை இங்கு தெரிந்துகொண்டேன். சைவ உணவில் அனைத்து சத்துக்கள் இருப்பதை ஈஷாவுக்கு வந்த பிறகே அனுபவப்பூர்வமாக தெரிந்துகொண்டேன். இனி முடிந்த அளவு சைவ உணவையே உண்ண வேண்டும் என தீர்மானித்துள்ளேன்.

பல்வேறு பணிகளில் பிஸியாக இருக்கும் சத்குருவை நாங்கள் நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான ஹட யோகா பயிற்சியை அளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

குர்பிரீத் சிங் (8 சீக் ரெஜிமெண்ட், சண்டிகர்):

உடலை வலுவாக வைத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய மைதானம் தேவையில்லை. வெறும் 6-க்கு 6 அடி இடம் போதும் என்பதை நான் இங்கு கற்றுக்கொண்டேன். அங்கமர்த்தனா பயிற்சி என் உடலை நெகிழ்வு தன்மைமிக்கதாக மாற்றியுள்ளது. எனக்கு யோகா கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் மிகவும் இனிப்பான தன்மையில் இருந்தார்கள். அவர்களை போன்றே நானும் இனிப்பாக மாற விரும்புகிறேன்.

நாயக் அஜய் சிங் (49 சப்ளை கம்பெனி, பாரக்பூர், கொல்கத்தா):

ஈஷாவில் நடக்கும் அனைத்து செயல்களும் மிக நேர்த்தியாக செய்யப்படுவது என்னைக் கவர்ந்தது. இந்த யோகா மையம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறது. இங்குள்ள தன்னார்வலர்கள் பெரிதும் மதிக்கத்தக்கவர்களாக உள்ளனர். நம்முடைய பாரத தேசத்தின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை இங்கு நான் அறிந்துகொண்டேன். இப்போது நான் என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் அணுக பழகி உள்ளேன்.