ஈஷாவில் நடந்தவை…
ஈஷாவின் மற்ற மையங்களில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி இருந்தது, தியானலிங்கத்தில் குவிந்த மக்கள், ஈஷா வித்யா பள்ளி தேர்வுகள், என்று இந்த வார ஈஷா நிகழ்வுகள் உங்கள் பார்வைக்காக இங்கே!
 
 

நாளுக்கு நாள் தியானலிங்கத்தை தரிசிக்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில், விடுமுறை நாளான இன்று, சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்து, அருள் பெற்று சென்றனர்.

1

பசுமைக் கரங்கள் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்! ஆம்! தமிழ் புத்தாண்டன்று ஈசனின் அக்னி ரூபமாகிய திருவண்ணாமலையை குளிர்விக்கும் வகையில், 100 தன்னார்வத் தொண்டர்கள் சேர்ந்து, 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யுமளவிற்கு ஒரு புதிய நர்சரியை உருவாக்கியுள்ளனர்.

3

சென்னை சந்தோஷபுரத்தில், தமிழ்ப் புத்தாண்டன்று ஒரு புதிய தியான மண்டபம் உருவாகியுள்ளது. அன்று சத்குரு சந்நிதி பிரதிஷ்டையும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 130க்கும் மேலான தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டு குருவின் அருள் மழையில் நனைந்தனர். இந்த தியான மண்டபம் தன்னார்வத் தொண்டர்களின் அன்றாட யோகப் பயிற்சிக்கும், ஈஷா யோகா வகுப்புகளுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்விடத்தை தியான அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: 9150108008

2

ஈஷா வித்யா பள்ளிகளில், முழு ஆண்டுத் தேர்வுகள் சிறப்பாக நடந்து முடிந்தன. தேர்வு முடிந்து, புன்னகை சிந்தும் முகங்களுடன் வெளி வந்த மாணவர்களைக் காண முடிந்தது. ஆசிரியர்களும் 100% தேர்ச்சியை எதிர்பார்த்து உற்சாகமாய் காத்திருக்கின்றனர்.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

நான் தியானலிங்க ஆராதனை சீடி எப்பொழுது கேட்டாலும் ஸ்ரீ சத்குரு நேர்படவே பிரசன்னம் ஆகி பக்கத்தில் இருந்தே அருள் புரிகிறார் இதை வெறும் வார்த்தைகளால் விளக்க இயலவில்லை