வரும் மே 13ம் தேதி ஈஷா வித்யாவிற்கு நீங்கள் நன்கொடை வழங்கினால் அந்த தொகையுடன் கூடுதல் தொகை சேர்கிறது. நீங்கள் வழங்கும் தொகையுடன் ‘குளோபல் கிவ்விங்’ நிறுவனம் தன் பங்கிற்கு கூடுதலாக தொகையை வழங்கவுள்ளது. நீங்கள் நன்கொடை வழங்குவதுடன் இதனை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்! ஒரு குழந்தையின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் வாருங்கள்!

வரும் மே 13ஆம் தேதி…

இந்திய நேரப்படி மே 13ஆம் தேதி மாலை 6.31 மணி முதல் மே 14ஆம் தேதி காலை 9.29 மணிவரை ஈஷா வித்யாவிற்கு நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு டாலருடனும்($) அதோடு கூடுதலான டாலர்களை சேர்த்து ‘குளோபல் கிவ்விங்’ நிறுவனம் ஈஷாவித்யாவிற்கு வழங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒருவர் தன் விருப்பப்படி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம். 1000 US டாலர் வரை வழங்கும் நன்கொடைக்கு கூடுதல் தொகையானது சேர்த்து வழங்கப்படும்.

குளோபல் கிவ்விங் நிறுவனம் மே 13ஆம் தேதி NGO நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடை தொகையுடன் $75000 டாலரை கூடுதலாக சேர்த்து பகிர்ந்து வழங்க உள்ளது.

நீங்கள் “பிறகு எப்போதாவது வழங்கிக் கொள்ளலாம்” என்று வைத்திருக்கும் தொகையை 13ஆம் தேதியன்று வழங்கினால் ஈஷா வித்யாவிற்கு அது கூடுதலான தொகையைப் பெற்றுத் தரும். குளோபல் கிவ்விங் எனும் அமைப்பு மூலமாக வழங்கப்படும் bonus day எனும் இந்தச் சலுகை 15 மணி நேரங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். உங்கள் பங்களிப்பை http://www.globalgiving.org/projects/ishavidhya என்ற இணைய முகவரியில் வழங்கலாம்!

கலிஃபோர்னியாவில் வசிக்கும் 14 வயது மாணவனின் கடிதம் இது. இந்தியா அவனது பார்வையில் எப்படி இருக்கிறது என்பதை பகிரும்போது அவனது உள்ளக் கனிவும், இந்தியாவின் எதிர்காலமான இந்திய மாணவர்களுக்காக அவன் என்ன செய்யவிருக்கிறான் எனச் சொல்லும்போது அவனது உறுதியும் வெளிப்படுகிறது.

“என் பெயர் லஹரி. நான் வசிப்பது கலிஃபோர்னியா என்றாலும், நான் பத்து தடவைக்கு மேல் இந்தியா வந்து சென்றுள்ளேன். ஒரு வருட காலம் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறேன். நான் இந்தியத் தெருக்களில் வறுமையும் பசியால் வாடும் முகங்களையும் பார்த்தேன். உடுத்த உடையும் உண்ண உணவுமின்றி தெருக்களில் பிச்சை எடுத்துத் திரியும் குழந்தைகளைக் கண்டேன். இதுபோன்ற மக்கள் இந்திய மக்கள் தொகையில் 12 சதவிகிதம் உள்ளனர் என்பதை அறிந்தபோது, அதிர்ச்சியாக இருந்தது.

அவர்களின் வாழ்க்கை முறை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்காலம் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. அன்றாட பிழைப்பிற்கே அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த எனக்குள் பலநூறு கேள்விகள் எழுந்தன. இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்? இவர்களின் நிலை இப்படியே இருக்குமா? இதற்கு தீர்வு என்ன? இதுபோன்ற கேள்விகள் அடுக்கடுக்காய் என் மனதில் தோன்றின.

நான் இந்தியக் குடிமகனாக இல்லை என்றாலும் என்னுடைய பெற்றோர் இந்திய கலாச்சாரத்திலிருந்து தோன்றியவர்கள். என்னால் இயன்ற அளவிற்கு இந்தியாவிற்கு உதவி செய்தே ஆக வேண்டும். இந்தியாவில் தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலித்தனமான, துடிப்புமிக்க இளைஞர்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் அனைவரும் நினைத்தால் இந்த நிலையை எளிதில் மாற்ற முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது இன்றைய மாணவர்களின் கையில்தான் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, எங்கள் பள்ளியில் உள்ள ஒரு கூட்டமைப்பின் மூலம் பல்வேறு அறக்கட்டளைகளிடமிருந்து நாங்கள் சுமார் $4000 திரட்டினோம். பல பள்ளிகளின் நிர்வாகிகள் எங்களது இந்தப் பணியை பாராட்டி ஊக்கமளித்தனர். இந்தியாவின் வறுமை நிலையையும் இன்றைய கல்வி முறையையும் மாற்றியமைத்து செழுமையாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்துள்ளது.

ஈஷா வித்யா பள்ளிகளின் தன்னார்வத் தொண்டு புரிவதன் மூலம் நாளைய உலகின் அஸ்திவாரங்களான மாணவர்களின் ஆற்றலைப் பெருக்க துணை நிற்கவிருக்கிறேன்.

இப்படிக்கு
லஹரி, ஃப்ரிமாண்ட் கலிஃபோர்னியா

ஈஷா வித்யாவின் நோக்கம்

பொருளாதார நிலையில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்காக இயங்கி வருகிற ஈஷா வித்யா பள்ளிகளின் நோக்கம், தரமான ஆசிரியர்களை உருவாக்கி, கணிப்பொறி & ஆங்கிலத்தில் திறமையான மாணவர்களை உருவாக்குவதாகும். மேலும், பள்ளிகளில் யோகா, விளையாட்டு, கலை மற்றும் இசைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்து வரும் தலைமுறையை எல்லா வகையிலும் மேம்பட்டதாய் உருவாக்க ஈஷா வித்யா உழைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் தற்சமயம் 8 ஈஷா வித்யா பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளான நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குதல், சமையல் அறை கட்டுதல் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல், வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல், வளாக சுற்றுச்சுவர் கட்டுதல், பள்ளி வாகன பராமரிப்பு போன்ற இன்றியமையாத தேவைகளுக்காக நீங்கள் நன்கொடையாக வழங்கும் தொகை பயன்படுத்தப்படும்.

ஈஷா வித்யாவிற்கு உதவுங்கள்! வருங்கால இந்தியாவை உருவாக்குங்கள்!

குறிப்பு:

பிற நாடுகளிலிருந்து நன்கொடை வழங்குவதற்கான நேரம்:

isha-vidhya-countries

இவை தவிர பிற இடங்களின் நேரம் குறித்து தெரிந்துகொள்ள: http://www.timeanddate.com/worldclock/meeting