நன்கொடை கொடுப்பதற்கு பலருக்கு மனம் இருந்தாலும், சிலருக்குத் தான் வசதியும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி வழங்க நினைப்பவர்களின் மனதில் எழும் பெரிய கேள்வி, நாம் கொடுக்கும் நன்கொடையை அந்த நிறுவனம் சரியான முறையில் பயன்படுத்துகிறதா என்பதுதான். ஆனால், கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக இயங்கும் ஈஷா வித்யாவிற்கு நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்! ஏன் என்பதைக் கூறுகிறோம், இங்கே!

நன்கொடை பெறும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் தளங்களான கிவ் இந்தியா மற்றும் குளோபல் கிவ்விங் (Give India and Global Giving ) ஆகியவை, ஒரு நிறுவனத்தை முழுமையாக பரிசீலித்த பின்னரே அங்கீகாரம் வழங்குகிறது. அந்த வகையில், கிவ் இந்தியாவிடமிருந்து இந்த வருடத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுவிட்ட ஈஷா வித்யா, குளோபல் கிவ்விங் நிறுவனத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கான கடைசிகட்ட நிலையில் உள்ளது.

ஈஷா வித்யாவிற்கு கிடைத்த அங்கீகாரம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா வித்யா ஒரு வெளிப்படையான அணுகுமுறையையும் ஒருங்கிணைந்த செயல்முறைகளையும் கொண்டுள்ள போதிலும், இவைபோன்ற தரமான அமைப்புக்களிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த அங்கீகாரம் பெறுவதற்கான செயல்முறை, ஒரு ஆண்டு காலத்துக்கும் மேலாக மிகவும் விரிவாக நடைபெற்றது. தணிக்கை செய்யப்பட்ட நிதி ஆதாரங்கள், பொறுப்பிலுள்ள முக்கிய நபர்கள் பற்றிய தகவல், ஈஷா வித்யா பள்ளிகளின் கொள்கைகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் பற்றிய தகவல்கள் என ஈஷா வித்யா பற்றி விரிவான பல தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

வழங்கப்பட்ட ஆதாரங்களைச் சரிபார்ப்பதற்காக கிவ் இந்தியாவின் (Give India) உறுப்பினர்கள், ஈஷா வித்யா பள்ளிகளுக்கு நேரடியாக வருகை தந்து தகவல்களைச் சரிபார்த்தனர். மேலும் அவர்கள், ஈஷா வித்யா திட்டத்தின் தலைவரையும், ஈஷா நிதித்துறை பொறுப்பாளரையும் மனித வளத்துறை பொறுப்பாளரையும் பள்ளி முதல்வர்களையும் நிர்வாக அதிகாரிகளையும் நேரில் சந்தித்தனர். இப்படி, பல கட்ட பரிசீலனைக்குப் பின்னரே ஈஷா வித்யாவிற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்கள், உறவினர்கள், பெரிய அளவிலான வியாபார நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என நாம் நன்கொடை கேட்கும் யாரிடமும், இந்த அங்கீகாரம், அவர்களின் சந்தேகங்களைக் களைவதற்கு நல்ல சான்றாய் இருக்கும்.

ஈஷா வித்யாவின் நோக்கம்

பொருளாதார நிலையில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்காக இயங்கி வருகின்ற ஈஷா வித்யா பள்ளிகளின் நோக்கம், தரமான ஆசிரியர்களை உருவாக்கி, கணிப்பொறி மற்றும் ஆங்கிலத்தில் திறமையான மாணவர்களை உருவாக்குவது. மேலும், ஈஷா வித்யா பள்ளிகளில் யோகா, விளையாட்டு, கலை மற்றும் இசைப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்து, வரும் தலைமுறையை எல்லா வகையிலும் மேம்பட்டதாய் உருவாக்குவதேயாகும். தமிழ்நாட்டில் தற்சமயம் 8 ஈஷா வித்யா பள்ளிகளில் உள்ள 4050 மாணவர்களில் சுமார் 2000 பேர் கல்வி உதவித் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 2700 மாணவர்கள் மதிய உணவுக்கான உதவித் தொகைக்காகக் காத்திருக்கின்றனர். இந்த கிராமப்புற மாணவர்கள் தரமான கல்வியை எளிதில் உள்வாங்க போஷாக்கான மதியஉணவு மிகவும் அவசியம். ஆனால் தற்போதைய வறுமைநிலை காரணமாக சரியான போஷாக்கின்றி வாழ்ந்து வரும் இவர்களில் பலர் அவர்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குளோபல் கிவ்விங்கிடமிருந்து 2013க்கான அங்கீகாரம் பெறுவதற்காக, ஈஷா வித்யா $5000 வரை நன்கொடை திரட்ட வேண்டியுள்ளது. ஈஷா வித்யாவிற்கு உங்கள் நன்கொடை கிடைத்தால், ஈஷா வித்யாவின் கனவுகளும் உங்கள் நிதிகளும் கைகோர்த்து, கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் வளமான வருங்காலத்தை மலரச் செய்திடும். ஈஷா வித்யா பற்றிய மேலும் தகவல்கள் பெற கீழ்க்கண்ட முகவரிகளுக்கு ஈ-மெயில் செய்யலாம்.

give.india@ishavidhya.org(for Give India)
global.giving@ishavidhya.org (Global Giving).
தொ.பேசி: +91-9442544458

ஈஷா வித்யாவிற்கு நன்கொடை அளிக்க:

குளோபல் கிவ்விங்கில் ஈஷா வித்யா

கிவ் இந்தியாவில் ஈஷா வித்யா