ஈஷா வித்யா பள்ளிகளில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள் சில இங்கே உங்களுக்காக…

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா வித்யாவில் விளையாட்டுடன் கணிதம்!

பொதுவாக பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்து நடக்க வேண்டும் என்று கற்றுத்தரப்படுகிறார்கள். இதனால் மாணவர்களின் கற்றல்திறன் குறைகிறது. ஆனால், ஈஷா வித்யாவின் சூழல் மாணவர்களுக்கு பயங்களைக் களைந்து, விளையாட்டுடன் கல்வி கற்க துணைநிற்கிறது. அந்த வகையில், கணிதத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில், பள்ளி வராண்டாவில் வைத்து சில விளையாட்டு செயல்முறைகள் வனவாசி ஈஷா வித்யாவில் நிகழ்த்தப்பட்டன. கணிதத்தில் ‘முழு எண்கள்’ஐ (Integer) விளையாட்டு செயல்பாடுகளுடன் மாணவர்கள் கற்றார்கள்.

ஈஷா வித்யாவில் பெண்கள் தினம்!

ஈஷா வித்யாவில் பெண்கள் தினம்!, Isha vidhyavil pengal dinam

அகிலமெங்கும் உலக பெண்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும்போது, ஈஷா வித்யாவில் கொண்டாடாவிட்டால் எப்படி?! கடலூர் ஈஷா வித்யாவில் பெண்களின் முன்னேற்றம், குடும்ப மற்றும் சமூகநிலைகளில் பெண் சுதந்திரம், பெண்களின் இன்றைய நிலை எனப் பல தலைப்புகளில் மாணவர்கள் விவாத அரங்கத்தை நிகழ்த்தினர். பெண்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் இதன்மூலம் அறிந்துகொண்டனர்.

சர்.சி.வி.இராமன் முகமூடிகள் அணிந்த மாணவர்கள்!

இராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாளை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம். தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் விநாடி வினா போட்டி நடைபெற்றது. அதோடு, சர்.சி.வி.இராமன் அவர்களின் முகமூடி அணிந்தபடி, நாளைய அறிவியலாளர்களான மாணவர்கள் காட்சி தந்தது சுவாரஸ்ய நிகழ்ச்சியாக இருந்தது.