உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் வழக்கம் இருக்கிறதா? புத்தகப் பிரியரா? எழுத்தை ரசித்து படிப்பவரா? இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆமாம் என்றாலும் இல்லை என்றாலும் நீங்கள் வாசிக்க வேண்டிய பதிவிது. ஈஷா வித்யா குழந்தைகளுக்காக நூலகம் அமைக்கும் பணியிலிருக்கும் நாம் உங்கள் புத்தகங்களை யாசிக்கலாமா? உதவுங்கள், உங்கள் புத்தகம் நூலகம் ஆகும்!

"ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன" விவேகானந்தரின் இந்தக் கூற்று புத்தகங்களின் உயர்வை உரக்கச் சொல்கிறது. ஒரு நல்ல புத்தகம், நல்ல நண்பனாக நம்முடன் இருந்து நமக்கு வழிகாட்டும். அந்த வகையில் புத்தகங்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும்போது, அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமையலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
புத்தகங்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும்போது, அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமையலாம்.

ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்கும் ஈஷா தத்தெடுத்துள்ள அரசுப் பள்ளிக்கூடங்களிலுள்ள குழந்தைகளுக்கும் நீங்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க முடியும். உங்கள் அண்டை வீட்டாரிடமும் நண்பர்களிடமும் உங்கள் குழந்தைகளிடமும் கூட இந்தப் புத்தக அன்பளிப்பைப் பற்றிக் கூறி அவர்களையும் இந்தப் புத்தகத் திரட்டலில் ஈடுபடச் செய்யலாம். நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் உள்ளோரிடம் புத்தகங்களைத் திரட்டி அதனைப் பள்ளிக்கு வழங்கலாம் அல்லது உங்கள் நிறுவனம் உதவிபுரிய முன்வந்தால், அவர்கள் வழங்கும் புத்தகங்களையும் வழங்கலாம்.

பொதுவாக, குழந்தைகளுக்கு கதைகளும் படங்களும் நிறைந்த புத்தகங்களே அதிகம் பிடிக்கும். குழந்தைகளுக்கான வார மற்றும் மாத இதழ்கள், அறிவியல் சம்பந்தமான சஞ்சிகைகள் மற்றும் புத்தகங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை ஈஷா வித்யாவிற்காக புத்தகங்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தும்போது, அவர்கள் அந்தப் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

நீங்கள் ஒரு புத்தகம் நன்கொடை அளிக்கிறீர்களா அல்லது 10 புத்தகங்கள் அளிக்கிறீர்களா என்பது முக்கியமானதல்ல, நீங்கள் அளிக்கும் புத்தகம் ஈஷா வித்யா பள்ளிகளின் நூலகங்களையும், ஈஷா தத்தெடுத்துள்ள அரசுப் பள்ளி நூலகங்களையும் சிறப்படையச் செய்யவிருக்கிறது என்பதே முக்கியம். மே 30ஆம் தேதிக்குள்ளாக புத்தகங்களை நீங்கள் வழங்கினால், ஜூன் மாதத்தில் பள்ளித் துவக்கத்திற்குள்ளாக புத்தகங்களை வகைப்படுத்தி பள்ளிகளுக்கு அனுப்ப வசதியாய் இருக்கும்.

புத்தகச் சேகரிப்பின்போது உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் உங்கள் குழந்தைகளுக்குக் கிடைத்த அனுபவங்களையும் புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்பினால், எங்கள் முகநூல் பக்கத்தில் உங்கள் அனுபவங்களைப் பகிருவோம்!

உங்கள் அன்பளிப்பை வழங்குவதற்கும் புத்தகச் சேகரிப்பு குறித்த மேலும் விபரங்கள் பெற prabhu.loganathan@ishavidhya.org என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள்!

நன்றி,
ஈஷா வித்யா பள்ளி நிர்வாகம்