நாட்டிய நாடகம்

“யோகாவை அருளிய ஆதியோகி - சிவன் எழுந்தருள்கிறார்!” என்ற தலைப்பில் நிகழவுள்ள இந்த நாட்டிய நாடகத்தில்... அந்த ஆதிசிவன்பால் காதல் வயப்பட்டு அவரையே மணக்க பிடிவாதம்கொண்ட தென்தமிழ் நாட்டு கன்னி ஒருத்தியின் காதலையும், சதிக்கு ஆளாகி அவளை மணக்க இயலாமல்போன சிவனின் விரக்தியையும் அபிநயங்களால் அரிதியிட்டுக் காட்டுகின்றனர் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்.

இந்நிலையில், தன் மீதே கோபம்கொண்ட சிவன் ஏறியமர்ந்த மலைதான் தென்கயிலாயமாம் வெள்ளியங்கிரி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யுகம் யுகமாய் அங்கே தியானத்தில் அமர்ந்த சிவன் அடிவார மக்களின் ஏக்கத்தை உணர்ந்த பின் யோகேஷ்வரராய் இறங்கி அருள்கிறார்! இந்த உன்னத வரலாற்றை வண்ணமயமும் கலைநயமும் கமழக் கமழ சொல்ல வருகிறது இந்த நாட்டிய நாடகம்!

தேவாரப் பாடல்...

ஈஷா சம்ஸ்கிருதி வழங்கும் நாட்டிய நாடகம்!

நாட்டிய நாடகத்தை தொடர்ந்து, சம்ஸ்கிருதி மாணவர்களால் தேவாரப் பாடல்கள் அரங்கேறவுள்ளன. சிவனைப் போற்றிப் பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளே தேவாரம் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூன்று நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ள இந்த தெய்வீகப் பாடல்களை ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாரம்பரிய இசையில் அழகாய் கோர்த்து வழங்குகின்றனர்.

பாரம்பரிய சங்கீத இசை விருந்து

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கும் பாரம்பரிய சங்கீத இன்னிசை கச்சேரி அரங்கேறுகிறது!

நிகழ்ச்சிக்கு சத்குருவின் அழைப்பு

வரும் மஹாசிவராத்திரியில் நிகழவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வான 112 அடி உயரமுள்ள ஆதியோகி திருமுகப் பிரதிஷ்டைக்கு அழைப்பாகவும், அந்த கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாகவும் சத்குருவின் வழிகாட்டுதலின் பேரில் இந்த கலைநிகழ்ச்சி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து அரங்கேறவுள்ளன. நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்!

நிகழ்ச்சி விவரங்கள்:

7-ஜனவரி-2017: மதுரை -நாட்டிய நாடகம், தேவாரம் மற்றும் இசை நிகழ்ச்சி
8-ஜனவரி-2017: சுசீந்திரம் -நாட்டிய நாடகம், தேவாரம் மற்றும் இசை நிகழ்ச்சி
13-ஜனவரி-2017: கோபி -நாட்டிய நாடகம்
28-ஜனவரி-2017: புதுச்சேரி -நாட்டிய நாடகம்
29-ஜனவரி-2017: வேலுர் -நாட்டிய நாடகம்
4-பிப்ரவரி-2017: திருப்பூர் -நாட்டிய நாடகம்
5-பிப்ரவரி-2017: கோவை -நாட்டிய நாடகம், தேவாரம்