கொரோனா வைரஸை தோற்கடிக்கும் இந்த யுத்தத்தின் முதல் வரிசையில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இருக்கின்றனர். கிராமங்களில் வாழும் மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு ஓய்வின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அத்தியாவசியமான சேவை வழங்குபவர்களுக்கும், நமது காவலர்களுக்கும் பாதுகாப்பு உபகரணம் விநியோகித்து முறையான பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றனர்.

உலகெங்கும் கோவிட்- 19 நோயாளிகள் எண்ணிக்கை அபாயகரமாக வளர்ந்து வரும் நிலையில், நோய் பரவுவதைத் தடுக்கும் யுத்தமானது தேசம் முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் போராளிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. முழுமையான ஒரு தீர்வைக்கொண்டு, தொற்றைத் தோற்கடிப்பதற்காக, ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

Isha-outreach-covid-relief-2

உணவு வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விவசாயிகள் அவர்களது விளைச்சலை விற்பதற்கு உறுதுணையாக இருத்தல், அத்தியாவசியத் தேவைகளை வழங்கி நமது தினசரி வாழ்வை சுமூகமாக நடத்திச் செல்ல உதவும் பாதுகாவலர்களிடையே பாதுகாப்பு உபகரணம் வழங்குதல் மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ சேவைகளின் திறனை விரிவாக்குதல் போன்றவைகள், வைரஸை தோற்கடிப்பதற்கான ஈஷா அவுட்ரீச்சின் பல்நோக்கு நீண்டகாலத் திட்டங்களாக இருக்கின்றன.

கோவிட்- 19 போராட்டத் திட்டமானது, ஈஷா அவுட்ரீச்சின் களப்பணி ஆதரவு குழு அங்கத்தினர்கள், அரசாங்க பிரதிநிதித்துவ நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் (PHC) மற்றும் சமுதாயத் தலைவர்கள் ஆகியவர்களிடமிருந்து பெற்ற உள்ளீடுகளின் ஒப்பீட்டுத் தரவுகளின் அடிப்படையில், குறிப்பாக கொரோனா தடுப்புக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த நலத்திட்டங்களின் முதல் கட்ட நடைமுறைப்படுத்தல், கோயம்புத்தூரின், தொண்டாமுத்தூர் வட்டத்தில் உள்ள பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது.

Isha-outreach-covid-relief-3

அடுத்து வரவிருக்கும் பல மாதங்களுக்கு களப்பணி ஆற்றவிருக்கும் உத்வேகமான ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்கள், லட்சக்கணக்கான பொது மக்களுக்கும் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குபவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதுடன், இந்தத் தொற்றை முழுமையாக அழித்தொழிக்கவும் உறுதி பூண்டுள்ளனர்.

கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, தொற்று குறித்த அச்சுறுத்தலுடன், வாழ்வாதாரம் இல்லாமையும் மற்றும் உணவுப் பற்றாக்குறையும் மிகப் பெரிய இரண்டு பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன. இந்த நெருக்கடியில் கிராமத்தினருக்கு உதவுவதற்காக, ஈஷா அவுட்ரீச், தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு விநியோகித்து வருகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்காக நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டு வருகிறது.

Isha-outreach-covid-relief-4

தொற்றுக்கு எதிரான பொதுஜன விழிப்புணர்வை அதிகரிக்கவும், தங்களையே மக்கள் காத்துக்கொள்வதற்கும், மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்கள், செய்தித் தொகுப்பு வீடியோக்கள் மற்றும் கையேடுகளை விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

Isha-outreach-covid-relief-5

கோவிட்-19 க்கு எதிரான இந்தப் போராட்டத்தில், நமது பாதுகாவலர்களைக் காப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு அத்தியாவசிய சேவை வழங்குபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், பாதுகாப்பு உபகரணங்களை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளனர். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், பஞ்சாயத்துப் பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை ஊழியர்கள் அடங்கலாக, ஆயிரக்கணக்கானோருக்கு முகக் கவசங்களும், கை சுத்திகரிப்பான்களும் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்கான, நுண்கிருமிகளை அழிக்கும் புகை வெளியிடும் கிருமிநாசினி பொருட்களும்கூட தயாராக வைக்கப்பட்டுள்ளன.

2003 முதல், மக்களுக்கு கிராமப்புற சுகாதாரப் பயன்களை அளித்துக்கொண்டிருக்கும் ஈஷா அவுட்ரீச்சின் தற்போதைய கிராமப்புற அவுட்ரீச் திட்டமாகிய “கிராமப் புத்துணர்வு இயக்கம்” என்று அழைக்கப்படும் அமைப்பின் ஆதரவின் கீழ் கோவிட்-19 க்கு எதிரான யுத்தம் நடத்தப்படுகிறது.

2003 ல் சத்குருவால் துவக்கப்பட்ட கிராமப் புத்துணர்வு இயக்கம் என்பது, இந்தியாவின் கிராமப்புற ஏழைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டுவருவதற்கான முன்னோடி சமூக நலத் திட்டமாக இருக்கிறது. சுகாதாரம், ஆரோக்கியம், வாழ்வாதாரம் மற்றும் சமூகப் புத்துணர்வுத் திட்டங்களை நடைமுறைப்-படுத்துவதன் மூலம், கிராமிய சமுதாயங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை கையாள்-வதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை கிராமப் புத்துணர்வு இயக்கம் செயல்படுத்தி வருகிறது.

ஒரு வேண்டுகோள்

நம்முடைய ஒட்டுமொத்த வளங்களையும் உடல்ரீதியான, அறிவுரீதியான மற்றும் பொருளாதார ரீதியான ஒன்று திரட்டுவதன் வாயிலாக, நாம் இணைந்து கொரோனா வைரஸை தோற்கச் செய்வோம். உங்களுடைய ஆதரவுடன், பூதாகாரமான கோவிட்-19 அச்சுறுத்தலில் இருந்து, பல்வேறு பஞ்சாயத்துகளின் கீழ் பல கிராமங்களில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவோம் என்று நம்புகிறோம். இந்தத் தொற்றானது கிராமப்புற இந்தியாவுக்குள் பரவுவதிலிருந்து தடுப்பதற்கான எங்களது பெருமுயற்சிகளில் எங்களுடன் இணைந்திருங்கள். நன்கொடை அளிக்க: ishaoutreach.org/beatthevirus

கோவிட்-19

கொரோனா வைரஸ் ஒரு தொற்று வியாதி. இது இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சுவாச உறுப்பைப் பாதிக்கிறது. தீவிரமான நிலையில் சுவாசிப்பதில் சிரமம், நிமோனியா ஏற்படுவதுடன், மரணமும் சம்பவிக்கிறது. இந்த நோய் இப்போது நாடெங்கும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. மார்ச் 11, 2020 அன்று நாவல் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை, உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. உலகெங்கும் உள்ள நாடுகளை உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும், நோயை குணப்படுத்துதல், நோய் கண்டறிதல் போன்ற பதில் நடவடிக்கைகளை அதிகரித்து, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் அழைப்பு விடுத்தது.