ஒரு மென்சாரல் மாலைப் பொழுதில், சென்னையில் அமைந்துள்ள ஈஷா லைஃபில் மெல்லிசையையும் கலைநயத்தையும் வியந்து இரசித்தபடியே உள்ளே நுழைந்தார் ரூப்ஷிகா.

பாரம்பரிய முறையில் நாடி பார்த்ததோடு, பிற உடல் பரிசோதனைகளையும் செய்து, அந்த அறிக்கையின்படி, சித்த வைத்தியருடனும், அலோபதி மற்றும் ஆயுர்வேத வைத்தியருடன் மட்டுமல்லாது, ஹடயோக ஆசிரியருடனும் கலந்துரையாடி அவருக்கான சிகிச்சைத் திட்டத்தை வடிவமைத்தோம்.

அன்று ரூப்ஷிகா தாய்மை உணர்வை உடலிலும் உள்ளத்திலும் சுமந்தபடி, தாய்மையின் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்தார். ‘‘கர்ப்பலேபம் (கருவுற்ற தாய்மாருக்கானது) வாங்க வந்தேன்,” என்றார். அன்று சந்தோஷத்தில் ஜொலித்த அவரது முகம் முதன்முதலில் ஈஷா லைஃபிற்கு வந்தபோது வாடிய முகமாகவே இருந்தது.

“8 வருடங்கள் கழித்தும் பிள்ளை வரம் இல்லையே,” என ஏங்கிய ரூப்ஷிகா, சிங்கப்பூரில் வசித்தபோது அலோபதி சிகிச்சைமுறை மட்டுமே கிடைத்தது. சிகிச்சை பலனில்லாத கவலையும் சமூகத்தின் அழுத்தமும் அவரை இந்தியாவிற்கு திரும்பச் செய்தது. ரூப்ஷிகாவின் இந்திய வருகை நல்வருகையாக அமைந்து, அவரது ஏக்கம் தணிந்தது ஈஷா லைஃப் மூலமாக!

தனது உடல் ரீதியான பிரச்சனைகளையும் அதற்குமுன் தான் மேற்கொண்ட மருத்துவத்தையும் விளக்கிக் கூறிய ரூப்ஷிகா, “எனக்கு Help பண்ணுங்க,” என்றபடி பல மாதங்களுக்கு முன் Isha Life-ல் முதன் முதலில் காலடி வைத்தவர். அவருக்கு அலோபதி பலனளிக்கவில்லை என்ற போதிலும் அதை ஒதுக்கிவிடாமல், அலோபதியுடன் பாரம்பரிய முறையில் நாடி பார்த்து ஆயுர்வேதா, சித்தா, யோகா ஆகிய அனைத்து வழிமுறைகளிலும் சிகிச்சை வழங்கப்பட்டது. அவற்றை சரியாக கடைபிடித்து, உணவுமுறை மற்றும் Lifestyleலிலும் மாற்றங்கள் செய்தார் ரூப்ஷிகா.

சில மாதங்களில் அவருக்கு சீரற்று நிகழ்ந்த மாதவிலக்கு ஒழுங்கானது; அதிக உதிரமாதல் நின்றது; கர்ப்பமானார். இப்போது ஈஷா தாய்மை வகுப்பிற்கு வந்து கொண்டிருக்கிறார்.  

ரூப்ஷிகா ஒருமுறை தனது தோழியையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். திருமணமாகி 4 வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாத அவரது தோழிக்கும், தன்னைப் போலவே அவருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

ஈஷா லைஃபில் வழங்கப்படும் சிகிச்சை முறைகளை ரூப்ஷிகாவே அவரது தோழிக்கு விளக்கினார். “இங்கே சிகிச்சையெல்லாம் integrated approach-ஆகத்தான் இருக்கும்; கண்டிப்பா உனக்கு நல்ல தீர்வு கிடைக்கும்,” என்ற ரூப்ஷிகாவிடம், அவரது தோழி சற்று விவரமாக சொல்லும்படி கூறினார்.

நாங்கள் ஈஷா லைஃப் குறித்த குறிப்பேடு கொடுத்து விளக்கமளித்தோம். “எளிமையா சொல்றதா இருந்தா இப்படிச் சொல்லலாம்... எப்படி அன்னப்பறவை பாலை மட்டும் எடுத்துக் கொண்டு நீரை ஒதுக்குதோ, அப்படி அலோபதி, யோகா, சித்தா, ஆயுர்வேதா, தெரபி, உணவுமுறை, வாழ்க்கைமுறை எல்லாத்துலேயும் இருக்குற நன்மைகளை எடுத்து ‘ஒருங்கிணைத்து’ சிகிச்சை வழங்குகிறோம்!” என்றோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேலும், அண்மையில் ஈஷா லைஃப் சிகிச்சை முடிவுகள் குறித்து செய்த சர்வே ஆராய்ச்சியின் முடிவுகளையும் அவரிடம் காண்பித்தோம். உடனே முகத்தில் பிரகாசம் தெரிய, ‘‘நல்லது, நானும் சிகிச்சைக்கு ரெடி டாக்டர்,” என்றார்.

பாரம்பரிய முறையில் நாடி பார்த்ததோடு, பிற உடல் பரிசோதனைகளையும் செய்து, அந்த அறிக்கையின்படி, சித்த வைத்தியருடனும், அலோபதி மற்றும் ஆயுர்வேத வைத்தியருடன் மட்டுமல்லாது, ஹடயோக ஆசிரியருடனும் கலந்துரையாடி அவருக்கான சிகிச்சைத் திட்டத்தை வடிவமைத்தோம். அவரது நோய்தன்மை குறித்து விளக்கினோம். கேள்விகளுக்குத் தகுந்த விடையளித்தோம். மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன; உணவில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது.

“உணவே மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்ட சிறுதானிய உணவுகளைத் தேடி வேறெங்கும் போக வேண்டியதில்லை. இங்கேயே கிடைக்கிறது,” என்று சொன்னதும் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! பின்னர் அவர் அங்கிருக்கும் தேவி சந்நிதியில் சற்றுநேரம் கண்மூடி அமர்ந்தார்.

அங்கிருந்து புறப்படும்போது எங்களை நோக்கிப் புன்னகைத்தார். இவ்வளவு பரபரப்பான சென்னை நகரில் இப்படியொரு அமைதியான கலைநயமிக்க ஒரு இடமா என வியந்தார். 
இவை பல்வேறு உடல் உபாதைகளுடன் ஈஷா லைஃபிடம் விடை தேடிவரும் பலரின் அனுபவ உண்மையாக இருக்கிறது. 

அலோபதி மருத்துவரின் கருத்து...

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு அலோபதியுடன் யோகா, ஆயுர்வேதா ரொம்ப உதவுது. Diabetes Management program, நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த வரம்னு சொல்லலாம். 

வெறும் அலோபதி மட்டும் எடுக்காம, யோகா, க்ளேஷ நாஷன கிரியா, ஆயுர்வேதா, சித்தா மருந்துகள் போன்ற எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கறதால, மனஅழுத்தம் குறைந்து திருப்தியான சூழலில் நோயை குணமாக்குறோம். தூக்கமின்மை போன்ற வியாதிகளுக்கு, தூக்க மாத்திரை ஒரு விடிவு அல்ல. இங்க ஹெர்பல் ரெமடீஸ் கிடைக்கறதால, தூக்கமின்மை சரியாகுது. மாதவிலக்கு நோய்களுக்கு வெறும் ஹார்மோன் மருந்து மட்டுமில்லாம, ஒருங்கிணைந்த சிகிச்சை நல்ல பலன் கொடுக்குது.

நம் ஆயுர்வேத, சித்த வைத்தியர்கள் என்ன சொல்றாங்க?

துரிதமா கவனிக்க வேண்டிய நோய்களுக்கு இங்க அலோபதி சிகிச்சை கொடுக்கப்படுது. பல்வேறு முறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கலந்துபேசி சரியான மருத்துவமுறைய தேர்ந்தெடுத்து, ஒரே இடத்துல கொடுக்கறதனால நோயாளிகளுக்கு அலைச்சல் குறையுது, நேரம் மிச்சமாகுது. 

யோகாவோட சேர்ந்து சிகிச்சை குடுக்கறதால மூட்டு வலிகள் (வழக்கமாக ஆகும் காலத்தைவிட) சீக்கிரமே குணமாவதைப் பார்க்குறோம். 

ஹட யோகா ஆசிரியர்...

இங்க நோயாளிகள் குணமாவதை கண்கூடாக பார்க்க முடியுது. பரபரப்பான வாழ்க்கையில, தினமும் யோகப் பயிற்சி பண்றதுல தடைகள் இருக்கு. இந்த இடத்துக்கு தினமும் காலையில வந்து சந்நிதி மற்றும் யோகா ஹாலில் யோகப் பயிற்சிகள் பண்றது ரொம்ப மகிழ்ச்சியா மக்கள் உணர்றாங்க. வெறும் நோய் குணப்படுத்துறது மட்டுமே நோக்கமா இல்லாம, வாழ்க்கை முறையையே உயர்த்தனும்ங்கற நோக்கத்தோட வீறு நடைபோடுது Isha Life!

சில அனுபவ பகிர்வுகள்

ஸ்ரீதர், சென்னை

என் இரு மகன்களுக்கும் Isha Life treatment எடுக்குறோம். பெரியவனுக்கு 8 வயசு. வலிப்பு நோய் பிரச்சனை உண்டு. இங்க வந்த பிறகு வலிப்பு வரல. இயற்கை மருத்துவம், யோகா மற்றும் தெரபி கொடுக்கப்பட்டது. சின்னவனுக்கு மோசமான ஆஸ்துமா. நசியம், ஆயுர்வேதா, நாடி சுத்தி, யோகா செஞ்சு இப்ப நல்லா மான்குட்டி மாதிரி வளைய வர்றான்.

ராணி, நாமக்கல்

நான் ஏற்கனவே ரொம்ப tension பேர்வழி. கர்ப்பமாகி 8 மாசம் ஆனபோது Isha Life வந்தேன். மனநல மருத்துவரையும் பார்த்தேன். ஆயுர்வேத மருந்தோட யோகப்பயிற்சி எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகு நல்லா தூங்கினேன். நிம்மதியா இருந்தேன். பிரசவம் நல்லபடியா நடந்து, என் குட்டி ராஜா பிறந்தான். சந்தோஷமா இருக்கேன். நன்றி ஈஷா லைஃப்.

ஏக்சனா சன்னிக்கோவா, அமெரிக்கா

அற்புத அனுபவம், நல்ல சர்வீஸ். மருந்துகள், உணவு பொருட்கள் நிறைய வாங்கிட்டுப் போறேன்.

டனிலா சிமா, ஜெர்மனி

முழுமையான அணுகுமுறை இங்க இருக்கு. இங்க உள்ள சூழல் உறுதுணையா இருக்கு. என்னோட வலி, மனநோய், அழுத்தம் மட்டும் சரியாகல, வாழ்க்கை தன்மையே நல்லாயிருக்கு. நோயாளியா வந்தேன்; இப்போ குணமாகி ஆனந்தமா போறேன். 

லக்ஷ்மி, சென்னை

ஈஷா லைஃபில் தாமிரப் பாத்திரங்களை உபயோகிக்கிறாங்க. நல்ல விஸ்தாரமான, மனதிற்கு இதமான ஒரு சூழலோட, வீடு மாதிரியான உணர்வு இருக்கு. இது சிகிச்சை செய்யும் இடம்ங்குற உணர்வே இல்ல, நாம நோயாளின்ற உணர்வும் வர்றதில்ல!

முகவரி:

ஈஷா லைஃப் ஹெல்த் சொல்யூஷன்ஸ்,
நெ.2, கிளப் ஹவுஸ் ரோடு, 
(ஸ்பென்சர் பிளாசா எதிரில்) மவுண்ட் ரோடு, 
சென்னை -2
தொலைபேசி: (044) 28885333, 8300045333