ஈஷாவில் ஓர் புதிய உதயம்... ஈஷா இல்லம் - மூத்த குடிமக்களுக்காக... இதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

"ஈஷா இல்லம்" - மூத்த குடிமக்களுக்காக ஈஷா அறக்கட்டளை உருவாக்கியுள்ள முதல் இல்லம், இது பஞ்சபூத தலங்களில் ஒன்றான, புனித திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் ஆசி மற்றும் வழிகாட்டுதலுடன் அமைக்கப்பட்டுள்ள ஈஷா இல்லம், மூத்த குடிமக்களது வாழும் முறையை ஒரு துடிப்பான உன்னதமான வாழ்வாக்கி, ஆன்மீகத்தில் பரிணமிக்கச் செய்கிறது. ஈஷா இல்லம் ரம்மியமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழ்நிலையை அளிப்பதோடு மனதிற்கு நிம்மதியான சூழலையும், தேவையான வசதிகளையும் வழங்குகிறது.

அர்ப்பணிப்பு நிறைந்த, நன்கு பயிற்சி பெற்ற, அவசர சூழ்நிலைகளை கையாளத் தெரிந்த தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு "ஈஷா இல்லம்" நிர்வகித்து பராமரிக்கப்படுவது இதன் தனிச் சிறப்பு. பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில், ஒரே வித நோக்கமும், விருப்பமும் இருப்பவர்களுடன் இணைந்து, புரிந்துணர்வுடன் வாழ்வதற்கு இவ்விடம் வழிவகுக்கிறது

ஈஷா இல்லவாசியாக மூத்த குடிமக்களை இணைக்க 94426 45550 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.


முகவரி:

ஈஷா இல்லம்
சாவல்பூண்டி ரோடு, நல்லவன்பாளையம்,
திருவண்ணாமலை - 606603
தொலைபேசி: 94426 45550
மின்னஞ்சல்: ishaillam@ishafoundation.org