இசையில் நனைந்த இதயங்கள்
மழை மேகம் நனைக்குமா, இசையில் நனைவோமா என்றே குழம்பியிருந்த இதயங்களை குளிர்வித்தது இன்றைய யக்ஷா. தன் இசை மழையில் அனைவரையும் நனைத்துச் சென்றார் கஷால்கர். மேலும் உள்ளே...
 
 

இசையும் நடனமும் வெள்ளியங்கிரி மண்ணில் ஆராதனை செய்யப்பட்ட இந்த தெய்வீக சங்கமத்தில் குளிர்ந்த பூமி மேகங்களாய் விண்ணை மூட, இந்த அற்புதக் கலைஞர்களின் திறமைக்கு வானம் பரிசு அளித்து விடுமோ என்று எண்ணிய தன்னார்வத் தொண்டர்கள் லிங்கபைரவி முன்னிலையில் வானமே கூரையாய் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேடையை, அவசர அவசரமாக ஆதியோகி ஆலயத்திற்குள் மாற்றினர்.

இன்று திரு உல்லாஸ் கஷால்கர் அவர்களின் இந்துஸ்தானி இசை யக்ஷாவில் அரங்கேறியது.

இந்துஸ்தானி இசைக்கு பரிச்சயமானவர்களுக்கு பத்மஸ்ரீ உல்ஹாஸ் கஷால்கர் அவர்களை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

1

தனது பாணியை திடீரென மாற்றி இசையின் வெவ்வேறு நடையுடன் விளையாடுவதில் வல்லவரான இவர் 3 வெவ்வேறு விதமான பாணிகளில் பாடும் திறமை உள்ளவர்.

கேதார் ராகத்தில் பாடலை துவங்கிய இவர் தனது அடுத்த பாடலில் ராகத்தை மாற்ற அது அரங்கத்தை அதிர வைத்தது.

மொத்தத்தில இன்று வான் மழை வருகிறேன் என்று மிரட்டினாலும், கண் சிமிட்டி வராமல் நட்சத்திரமாய் வானில் ஜொலித்தது. குளுமையாய் குளிர் தென்றலாய் நம் இதயம் வருடிச் சென்றது.

நாளை சிதார் இசைக் கலைஞர் திரு. நிஷாத் கான் அவர்களின் மெல்லிசையில் மகிழ்வோம். நாளை சந்திப்போம்.


யக்ஷா நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பின் மூலம் உங்கள் கணினித் திரையில் கண்டு களிக்க கீழே உள்ள லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும்.

Yaksha Live

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1