லிங்கபைரவியில் மஹாளய அமாவாசை

கடந்த செப்டம்பர் 16ம் தேதி இரவு லிங்கபைரவியில் மஹாளய அமாவாசை வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த மகத்துவமிக்க இரவில் இறந்த முன்னோர்களுக்கு நம் நன்றியை வெளிப்படுத்தி, பிரத்யேகமான வருடாந்திர காலபைரவ சாந்தி செயல்முறை செய்யப்பட்டது. இந்நிகழ்விற்காக ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்து, நேரலையில் இணைந்து நிகழ்வில் பங்கேற்றனர்.

மரம் தங்கசாமி அவர்களுக்கு காவேரி கூக்குரலின் அஞ்சலி

திரு.மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் 1.26 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்

செப்டம்பர் 3ல் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் மூன்றாமாண்டு நிறைவடைந்த அதே வேளையில், 2019ல் துவங்கப்பட்ட ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் முதலாமாண்டும் நிறைவுற்றது. அந்த சிறப்பு வாய்ந்த நாள் சத்குருவின் பிறந்த நாளாகவும் அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள நதிகளுக்கு புத்துயிரளித்து மீட்டெடுக்கும் நோக்கில் நமது குரு இந்நாளை அர்ப்பணித்துள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நதிகளை மீட்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில், இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மாண்புமிகு அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சத்குருவுடன் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நதிகளை புத்துயிர் பெறச் செய்வது பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஒரு கலந்துரையாடலில் இணைந்தார்.

நதிகளை மீட்கும் உத்வேக கொண்டாட்டத்தில் UNCCDன் நிர்வாக செயலாளர்

நதிகளை மீட்பதற்காக சத்குருவால் அர்ப்பணிக்கப்பட்ட நாளான செப்டம்பர் 3ம் தேதி, UNCCDன் நிர்வாக செயலாளர் திரு.இப்ராஹிம் தியாவ் அவர்கள், நதிகளை மீட்பது குறித்த செய்தியை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

காவேரி கூக்குரல் பற்றி ஒரு ஆவணப்படம்

29 ஆகஸ்ட் 2020, சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு "காவேரி கூக்குரல்: ஒரு நதியை மீட்கும் பயணம்" என்ற லிசா சபினா ஹார்னியின் ஒரு ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில் பிரீமியர் காட்சியாக ஒளிபரப்பானது.

இந்திய அளவில் ட்ரெண்டான ஹேஷ்டேக்

செப்டம்பர் 3 சத்குருவின் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக வலை தளங்களில் பொதுமக்களும் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். #HBDSadhguru என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

சத்குருவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தனது வாழ்த்தினை தெரிவித்த சத்குரு, விநாயகரின் தனித்துவத்தை எடுத்துரைத்து, அவரைப் போல நாமும் எவ்விதத்தில் மாற வேண்டும் என்பதைக் கூறினார். மேலும், விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபியான கொழுக்கட்டையை சத்குரு தன் சமையலறையில் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டது விழாவுக்கு புது வண்ணம் சேர்த்தது.

சவாலான இந்நேரத்தில் சத்குரு தரிசன நேரலை

“சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்” என்ற தலைப்பில் இணையம் வாயிலாக தனது தரிசனத்தை ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நேரலையில் வழங்கி வருகிறார் சத்குரு. மாலை 6 மணியளவில் துவங்கும் இந்த நேரலை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து, சத்குருவின் ஆழமிக்க உள்நிலை தரிசனங்களைப் பெற்று சவாலான இந்நேரத்தை சத்குருவின் அருளுடன் இலகுவாக கடந்து செல்கின்றனர்.

அமெரிக்காவில் சத்குருவின் மோட்டார் சைக்கிள் பயணம்

நவீன அமெரிக்காவை உருவாக்குவதில் பண்டைய பூர்வீக அமெரிக்க பகுதிகள் மற்றும் அடையாளச் சின்னங்களாக விளங்கும் இடங்களை ஆராயும் விதமாக, சத்குரு அமெரிக்காவின் மையப்பகுதி வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசம் கட்டமைக்கப்பட்டது குறித்து ஒரு ஞானியின் பார்வை என்ன என்பதை இணையம் வாயிலாக சத்குருவுடன் இணைந்திருந்து அறியுங்கள். #RideWithSadhguru