இளநீர் பாயசம்
பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி - இப்படியான பொருட்களில் பாயசம் செய்வதுதான் நம் வீடுகளில் வழக்கம். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பாயசங்கள் கொஞ்சம் வித்யாசமானவைதான். இதை நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, ரொம்ப சத்தானதும் கூட...
 
 

ஈஷா ருசி

பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி - இப்படியான பொருட்களில் பாயசம் செய்வதுதான் நம் வீடுகளில் வழக்கம். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பாயசங்கள் கொஞ்சம் வித்யாசமானவைதான். இதை நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, ரொம்ப சத்தானதும் கூட...

இளநீர் பாயசம்

தேவையான பொருட்கள்:

இளநீர் - அரை லிட்டர்
சேமியா - 150 கிராம்
முந்திரி - 25 கிராம்
பாதாம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
வெள்ளரி விதை - 25 கிராம்
பூசணி விதை - 25 கிராம்
பனங்கற்கண்டு - 250 கிராம்

செய்முறை:

  • இளநீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, பூசணி விதை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
  • சேமியா வெந்தவுடன் அதில் இந்த பொடியையும் சேர்க்கவும் அதே சமயத்தில் பனங்கற்கண்டுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இதனையும் கொதிக்கின்ற பாயசத்தில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இது பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் பால் பாயசத்தை விட பலமடங்கு சுவையானதாக இருக்கும். மிகச் சத்தான உணவும் கூட!

பலாப்பழ விதை பாயாசம்

தேவையான பொருட்கள் :

பலாப்பழ விதை - 250 கிராம்
தேங்காய் - 1 (துருவியது)
வெல்லம் - 200 கிராம்
பச்சரிசி மாவு - 4 ஸ்பூன்
ஏலக்காய் - 6
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

விதை தோல் எடுத்து கழுவி குக்கரில் வேக வைத்து சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவலில் மூன்று பால் எடுக்க வேண்டும். (தனித்தனியாக எடுக்க வேண்டும்)

  • மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி முதலில் எடுப்பது முதல் பால். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
  • பிறகு வடிகட்டி எடுக்கப்பட்ட தேங்காய் சக்கையை மீண்டும் மிக்ஸியில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்ற¤ அரைத்து வடிகட்டி எடுப்பது இரண்டாவது பால்.
  • மீண்டும் தேங்காய் சக்கையை எடுத்து மிக்ஸியில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுப்பது மூன்றாவது பால்.
  • மூன்றாவதாக எடுக்கப்பட்ட பாலில் வேக வைக்கப்பட்ட பலாப்பழ கொட்டை மற்றும் வெல்லம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • இரண்டாவதாக எடுக்கப்பட்ட பாலில் அரிசி மாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் கரைத்து பிறகு வேக வைக்க வேண்டும்.
  • வெந்தவுடன் ஏலக்காய் பொடி தூவி, முதல் பாலையும், மூன்றாவது பாலையும் அதில் ஊற்றி இறக்கி வைக்க வேண்டும். சுவையாகவும், வயிற்றுப்புண்ணுக்கு மருந்தாகவும் அமையும்.
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1