இதமான இந்துஸ்தானி!
 
 

சரோத் எனப்படும் இசைக் கருவியை கருவியாய் அல்லாமல் தன் வாழ்வாய் கொண்ட இவர் இன்று தியான அன்பர்களை இந்துஸ்தானி இசையின் இன்ப அதிர்வுகளால் இறைநிலையில் ஆழ்த்தினார்.

இருபத்தெட்டே வயதான அபிஷேக் லஹரிக்கு 23 ஆண்டுகள் இசை அனுபவம் இருக்கிறது.

5 வயதிலிருந்து இசையுடன் சேர்ந்தே வளர்ந்த இவர் “இசை என்பது என் இரத்தத்தில் இருக்கிறது“ என்கிறார்.
இசையில் இத்தனை ஆண்டுகால அனுபவத்தை ஏந்தி நிற்கும் இவர், “சத்குருவின் முன் இன்று இசைப்பதை என் வாழ்நாளின் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

மாலை வேளையில் மெல்லிய காற்றில் மிதந்து வந்த இசையில் அபிஷேக் லஹரியின் இளமையின் புதுமையும், பல ஆண்டு அனுபவத்தின் முதிர்ச்சியும், உள் நிலை ஈடுபாடும் சேர்ந்தே இருந்தது.

வந்திருந்தோர் அனைவருக்கும் செவிக்கு விருந்தாய், உள்ளத்திற்கு மருந்தாய் அமைந்திருந்தது இன்றைய இசை நிகழ்ச்சி!

நாளை மாதவி முட்கல் அவர்களின் ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

யக்ஷா நிகழச்சிகளை யக்ஷா live என்னும் இணைய முகவரியில் கண்டு களிக்கலாம்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1