ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உள்நிலையில் விழுந்த விதை - ஷாம்பவி!
டிசம்பர் 5 முதல் 9ம் தேதிவரை நடந்த இன்னர் இஞ்சினியரிங் (Inner engineering) வகுப்பில் நாடு முழுவதிலுமிருந்து 22 IAS அதிகாரிகளும் 7 Class-1 அதிகாரிகளும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்து பங்கேற்றனர்.
 
 

அரசாங்கத்தின் முதுகெலும்பாக நின்று, அரசு எந்திரம் செவ்வனே செயல்பட துணைநிற்பது அரசு அதிகாரிகளே! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு! ஆனால், அரசு அதிகாரிகள் தங்களின் பணி-ஓய்வு காலம்வரை மக்களுக்காக சேவை செய்யும் வாய்ப்பை பெறுகின்றனர். எந்தவொரு புதிய திட்டமானாலும் அதனை செயல்படுத்தும் பொறுப்பு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளையே சேர்கிறது; எந்தவொரு அவசர சூழ்நிலையானாலும் முன்னின்று சரியானவற்றை நிகழ்த்தி வழிநடத்துவதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது.

டிசம்பர் 5 முதல் 9ம் தேதிவரை நடந்த இன்னர் இஞ்சினியரிங் (Inner engineering) வகுப்பில் நாடு முழுவதிலுமிருந்து 22 IAS அதிகாரிகளும் 7 Class-1 அதிகாரிகளும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்து பங்கேற்றனர்.

அந்த வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களாகவும், பல்வேறு துறைகளின் முதன்மை இயக்குநர்களாகவும் பொறுப்பேற்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர்கள் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சியை (The Department of Personnel and Training (DOPT)) மேற்கொள்வது மிக முக்கியமான செயல்முறையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த பயிற்சியிலுள்ள அதிகாரிகள் ஈஷாவின் இன்னர் இஞ்சினியரிங் வகுப்பை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளும் வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ எனும் ஓர் அற்புத யோகப் பயிற்சியின் விதை விதைக்கப்படுவதன் மூலம் நாட்டின் தலைமைப் பொறுப்பிலுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த உள்நிலை தெளிவைக் கொண்டுவரமுடியும். இதனால் நாட்டில் பல்வேறு நன்மைகள் விளைந்திடச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை!

டிசம்பர் 5 முதல் 9ம் தேதிவரை நடந்த இன்னர் இஞ்சினியரிங் (Inner engineering) வகுப்பில் நாடு முழுவதிலுமிருந்து 22 IAS அதிகாரிகளும் 7 Class-1 அதிகாரிகளும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்து பங்கேற்றனர். பஞ்சாப், இராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஸ்கர், மஹாராஷ்ட்ரா, கொல்கத்தா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த இந்த 29 அதிகாரிகளும் 2016-17 ஆண்டிற்கான கட்டாய சேவை பணியின் ஒரு அங்கமாக ஈஷா இன்னர் இஞ்சினியரிங் வகுப்பை தேர்ந்தெடுத்து, வகுப்பில் கலந்துகொண்டனர்.

பணியாளர் மற்றும் பயிற்சித் துறையானது, ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் இருக்கும் AIS (IAS, IPS, IFS) அதிகாரிகளுக்கும், "A" பிரிவு அதிகாரிகளுக்கும் சேவைப் பணிகளுக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம். அதிகாரிகள் தங்கள் தற்போதைய பணியைப் பொறுத்தும், வருங்காலத்தில் தாங்கள் செய்யப்போகும் பணிகளைப் பொறுத்தும் தங்களுக்கு ஏற்ற பயிற்சி முறைகளை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

டிசம்பர் 5ஆம் தேதி துவங்கிய இந்த யோகா வகுப்பு டிசம்பர் 9வரை நடைபெற்றது. வகுப்பில் கலந்துகொண்ட 29 பங்கேற்பாளர்களும் அடிப்படையான சில ஆசனங்கள் மற்றும் பிராணாயாமப் பயிற்சியோடு வகுப்பை துவங்கினர். வகுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் சக்திவாய்ந்த "ஷாம்பவி மஹாமுத்ரா" பயிற்சிக்கான தீட்சை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவுவிழாவில் சத்குரு அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள் குழுவினரிடம், வாழ்க்கை மற்றும் யோக விஞ்ஞானம் குறித்து பல்வேறுபட்ட உன்னத அம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.

தலைமைப் பண்பு குறித்து சத்குரு...

பத்து பேரின் வாழ்க்கையை தொடக்கூடியவருக்கு, சமூகத்தில் மாற்றம் விளைவிக்கக்கூடிய திறன் இருக்கிறது. அவர் ஒரு மாவட்ட ஆட்சியராக இருக்கலாம் அல்லது மளிகைக் கடை வியாபாரியாக இருக்கலாம், ஒரு குடும்பத் தலைவியாகக் கூட இருக்கலாம். -சத்குரு

“புரட்சி என்றால் இன்னொருவரை மாற்றுவது அல்ல. நான் மாறத் தயார் என்பதே உண்மையான புரட்சி. உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டால், உங்களுக்கு கீழே பணி செய்பவர்களுக்கு அந்த மாற்றம் தானாகவே தொற்றிக்கொள்ளும். ஏனென்றால், ஒரு தலைவருக்கு தேவைப்படுவதெல்லாம் தலைவர் வழிபாடு அல்ல, தன் தலைமையை செயல் வல்லமையுடையதாக செய்வதற்கு பலநிலைகளில் அவருக்கு தேவை உறுதுணை. ஒரு மாவட்ட ஆட்சியர் மட்டும் இதற்கு போதாது. பல நிலைகளில் தலைமைகள் தேவை. ஜனநாயகம் என்றால், மக்களே தலைவர்கள் என்று அர்த்தம். பத்து பேரின் வாழ்க்கையை தொடக்கூடியவருக்கு, சமூகத்தில் மாற்றம் விளைவிக்கக்கூடிய திறன் இருக்கிறது. அவர் ஒரு மாவட்ட ஆட்சியராக இருக்கலாம் அல்லது மளிகைக் கடை வியாபாரியாக இருக்கலாம், ஒரு குடும்பத் தலைவியாகக் கூட இருக்கலாம்."

அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்நிலையில் அமைதியோடும் சமநிலையோடும் இருக்கும்போது மிகச் சிறப்பாக செயலாற்ற முடியும் என்பது சத்குருவின் கருத்து. அதற்கு இந்த ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும்.

ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியின் பலன்கள் குறித்து சத்குரு

ஷாம்பவி மஹாமுத்ரா என்பது உயிரோடு இருக்கின்ற ஒரு தொழில்நுட்பம். இது வெறும் பயிற்சிஅல்ல. இது உயிரோடு இருக்கின்ற ஒரு தன்மை. தினசரி பயிற்சி செய்துவந்தால் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு உள்ளேயிருந்து ஆனந்தநிலை பொங்கிப் பிரவாகிக்கும். அது மட்டுமல்ல, வாழ்க்கையை நாம் உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான திறமை, புத்திசாலித்தனம், சக்தி என்று நமக்குத் தேவையான அனைத்தையும் பிரமாதமாக நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

எல்லாவற்றிற்கும் முக்கியமாக, நம்முடைய வாழ்க்கையை இலகுவாக நடத்திக் கொள்கின்ற அளவுக்குத் தேவையான சூழ்நிலை உங்களுக்குள்ளே வரும். சிறிது கவனம் செலுத்தி பயிற்சி செய்பவர்களுக்கு உயிர்த்தன்மை பிரமாதமாக செயல்படும்.

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1