இந்துஸ்தானி குரலிசையில் திளைத்த மூன்றாம் நாள் யக்ஷா!
மூன்றாம் நாள் யக்ஷா பற்றிய ஒரு கண்ணோட்டம் இங்கே...
 
 

மூன்றாம் நாள் யக்ஷா பற்றிய ஒரு கண்ணோட்டம் இங்கே...

தெய்வீக இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான 'யக்ஷா' கொண்டாட்டத்தில் மூன்றாம் இரவான இன்று, திரு.அஜோய் சக்ரபோர்த்தி அவர்களின் பாரம்பரிய இந்துஸ்தானி குரலிசை நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

மாலை 6.50 மணியளவில் ஆதியோகி சிலை முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை சத்குருவுடன் ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். இன்றைய நிகழ்ச்சியில், திரு.அஜோய் சக்ரபோர்த்தி அவர்களின் பாரம்பரிய இந்துஸ்தானி குரலிசை, அந்த இசையை கேட்டுப் பரிட்சயமில்லாத மக்களையும் ரசிக்க வைத்ததென்றே சொல்லவேண்டும்.

“எனக்கு தென்னிந்திய இசை மற்றும் வட இந்திய இசை என்ற பாகுபாட்டில் நம்பிக்கை இல்லை! இந்திய இசையில் எனக்கு நம்பிக்கை உள்ளது!” என்று கூறி தனது முதல் ஆலாபனையைத் துவங்கிய திரு.சக்ரபோர்த்தி, இசையுலக மேதை தான்சேன் அவர்களின் இசையமைப்பில் உருவான ஆலாபனை ஒன்றுடன் துவங்கினார். பின் ஹம்சத்வனி இராகத்தில் தன் குரு இசையமைத்த பாடலை ஆலாபனை செய்து, அதனை சத்குருவிற்கு சமர்ப்பிப்பதாக அறிவித்தார். முன்னதாக அடுத்த தலைமுறைக்கு இசையைக் கொண்டு சேர்ப்பதற்காக தான் மேற்கொண்டுவரும் பணிக்களுக்காக சத்குருவிடம் ஆசிகளை வேண்டிக்கொண்டார்.

இந்துஸ்தானி இசையில் அவர் வழங்கிய ஆலாபனைகள் அவரது இசை நிபுணத்துவத்திற்கு சான்றுகளாக அமைந்தன. அந்த அற்புத இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை ரசிக்க வந்த அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1