தூர்தர்ஷன் செய்தியில் சத்குரு உரை

கடந்த 2020 டிசம்பர் 21 அன்று, தூர்தர்ஷன் செய்தியில் பேசுவதற்காக சத்குரு அழைக்கப்பட்டார். அங்கு இந்திய விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு நிரந்தர தீர்வினைக் கொண்டு வருவதற்கான ஒரு விரிவான செயல்திட்டம் குறித்து அவர் பேசினார். உலகின் உணவுக் களஞ்சியமாக, ஆர்கானிக் கைத்தறி ஜவுளித் தொழிலின் தலைமை இடமாக மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளை வழங்கும் ஒரு மையமாக மாறுவதற்கான சரியான சாத்தியங்களை இந்தியா எவ்விதத்தில் கொண்டுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.

காமன் வெல்த் கிளப்பில் சத்குருவுடன் ஜார்ஜ் ஹம்மண்ட் கலந்துரையாடல்

கடந்த 2020 டிசம்பர் 24ல், அமெரிக்காவின் பழமையான இலாப நோக்கமற்ற மிகப்பெரிய பொது விவகார மன்றமும் கல்வி அமைப்புமான காமன் வெல்த் கிளப்பில், மனிதநேய மன்றத்தின் தலைவராக ஜார்ஜ் ஹம்மண்ட் உள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கலந்துரையாடல், மேற்கத்திய சிந்தனையோட்டம் மற்றும் யோகப் பாரம்பரியத்திற்கு இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்து பேசப்பட்டன. பல வேறுபட்ட விஷயங்கள் குறித்த இந்த உரையாடல், மோட்டார் சைக்கிள் சவாரி, மார்க் ட்வைன், ஒரு குருவாக இருப்பதன் அழுத்தங்கள், மரணத்தை நெருங்கிய அனுபவங்கள், சாக்ரடீஸ், பித்தகோரஸ், தர்க்க அறிவின் வரம்புகள், அடிப்படை யோக நெறிமுறைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.

புத்தாண்டு சத்சங்கம்

புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31 அன்று நடைபெற்ற ஆன்லைன் சத்சங்கத்தில், வைரஸ் தொற்று காலத்தின் சவால்களை எவ்வாறு நேர்மறையான சாத்தியங்களாக மாற்றமுடியும் என்பதைப் பற்றிய தனது ஆழமிக்க பார்வையை சத்குரு முன்வைத்தார். தொற்றுநோய் சூழலால் ஒருவர் நேரில் வந்து பங்கேற்பது தடைபடும் போது, இந்த மஹாசிவராத்திரியில் ஒருவர் எவ்வாறு ஆதியோகியின் அருளைப் பெறமுடியும் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

சத்குருவுடன் இங்கிலாந்து மனநல நிபுணர்கள் கலந்துரையாடல்

கடந்த ஜனவரி 3ம் தேதி மனச்சோர்வு, தற்கொலை, மனநலம் குறைந்து வருவது, பதட்டம் அதிகரித்தல், உணவு உண்பதில் பிரச்சனைகள் மற்றும் தொற்றுநோய் காலத்தில் குடிப்பழக்கம் அதிகரித்திருத்தல் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி இங்கிலாந்தின் மனநல நிபுணர்கள் சத்குருவின் நுட்பமான கருத்தைகளை அறிய முற்பட்டனர். மனநோய்க்கான அடிப்படைக் காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சத்குரு, உணவுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பைப் பற்றி எடுத்துரைத்தார். உணவை நாம் உட்கொள்ளும் விதம் நம் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதையும் அவர் விளக்கினார்.

பிரிட்டிஷ் ஹெரால்ட் அட்டைப் படத்தில் சத்குரு

பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகையின் ஜனவரி-பிப்ரவரி 2021 இதழில், சத்குரு அதன் அட்டைப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளார். சத்குருவின் ஆழமிக்க ஆன்மீகம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பலவற்றோடு, முழுமையான மனித நல்வாழ்வுக்காக நாற்பது ஆண்டு கால இடைவிடாத அர்ப்பணிப்பைக் கொண்ட சத்குருவின் வாழ்க்கை மற்றும் குறிக்கோள்களை விவரிக்கும் விதமாக ஒரு சிறப்புக் கட்டுரை அதில் இடம் பெற்றுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விழிப்புணர்வான உலகைக் கட்டமைப்போம் நிகழ்ச்சியின் தொடக்க வெபினார்

ஜனவரி 16 அன்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஆசிரியர்களுக்கான இணைத் தலைவர் டாக்டர். நான்சி ஓரியோல், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் உதவி பேராசிரியரும், பாஸ்டன் ஹெல்த்கேரின் தலைவருமான டாக்டர். ஜேம்ஸ் ஓ'கோனெல், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மனநல ஆராய்ச்சியாளர் விக்டர் லோபஸ் அந்தோனி கார்மென் மற்றும் மூத்த பூர்வக்குடி மனிதர் தியோகாசின் கோஸ்டோர்ஸ் ஆகியோர் சத்குருவுடன் விழிப்புணர்வான உலகைக் கட்டமைக்கும் முன்னெடுப்பில் இணைந்தனர். உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முயற்சித்த தருணங்களில் தாங்கள் எதிர்கொண்ட சுய அனுபவங்கள் மற்றும் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அவர்கள் பேசினர். பூர்வீக அமெரிக்க ஆன்மீகத்தை ஆராய்வதற்கு மேற்கொண்ட தனது தனித்துவமான அனுபவத்தையும் சத்குரு பகிர்ந்து கொண்டார். மேலும், பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் சுகாதார சவால்களுக்கான தீர்வுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

ஆதியோகி முன்னிலையில் பொங்கல் திருவிழா

கடந்த ஜனவரி 15 மாட்டுப் பொங்கல் திருநாளன்று, ஆதியோகி முன்னிலையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், வெளிநாட்டில் வாழும் தன்னார்வலர்கள் மற்றும் பிற தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும், ஈஷாவின் இசை நிகழ்ச்சியும் அரங்கேறின. பல்வேறு வகையான நாட்டு மாடுகள் கண்காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாலையில் நடைபெற்ற சத்குருவின் சிறப்பு சத்சங்கத்தில், நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என ஒரு தியான அன்பர் சத்குருவிடம் கேட்டபோது, தான் எதிர்பார்க்கும் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வாக்குறுதியை அளிப்பவர்களுக்கே தனது ஓட்டு என்று சத்குரு அறிவித்தார். இதேபோல ஒவ்வொருவரும் தங்களது ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அதன் அடிப்படையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு துணை நிற்பது, தமிழக கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை சத்குரு அப்போது முன்வைத்தார்.

வேளாண் சட்ட மசோதா குறித்த சிக்கலுக்கான தீர்வு

வேளாண் சட்டங்கள் பற்றிய விவாதம் நாடு முழுவதும் நடந்துவருவதால், சத்குரு அது குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மேலும், இந்த சட்டங்கள் அந்தந்த மாநிலங்களுக்கான பரிந்துரைகளாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். அவர் மேலும் ஒரு ட்விட்டர் பதிவில் கூறுகையில், வேளாண் மசோதாக்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப பிராந்திய அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், விவசாயிகளுடன் சேர்ந்து மாநிலத் தலைமை இந்த தேவைகளை மதிப்பீடு செய்து தீர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருப்பது குறித்து…

CNN-News18 சேனலில், இந்து கோவில்களை அரசாங்கம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து சத்குரு பேசினார். மேலும், இதனால் இந்தியாவின் பழம்பெரும் ஆன்மீகப் பாரம்பரியத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பேசியதோடு, சமுதாயத்திற்கும் கலாச்சாரத்திற்கும் இழைக்கப்பட்ட இந்த அநீதியை சரிசெய்வதற்கான வழிகளையும் சத்குரு பரிந்துரைத்தார்.

TiE-con டெல்லி-NCRல் சத்குரு

ஜனவரி 28ல் டெல்லியில் நடந்த TiE-con மாநாட்டில், “Disruption in Education” என்ற தலைப்பில் அமைந்த ஒரு அமர்வில், சந்தீப் சின்ஹா (லூமிஸ் பார்ட்னர்கள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர்) அவர்கள், ஒரு குழந்தையின் உள்ளார்ந்த அறிவை வளர்ப்பது, உலகளாவிய கல்வி முறையை கட்டமைப்பது மற்றும் பாரம்பரிய இந்திய கல்விமுறையை மீட்டெடுப்பது குறித்து சத்குருவிடம் கேள்விகளை முன்வைத்தார். நமது சமூகத்தில் பல்வேறு நிலையிலான கல்விமுறையின் அவசியம் குறித்து சத்குரு ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பகிர்ந்ததோடு, அனைவரையும் ஒரே கல்வி முறையின் கீழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

ஈஷாவில் தைப்பூசக் கொண்டாட்டம்

புனிதமிக்க திருநாளான தைப்பூசம் கடந்த ஜனவரி 28 அன்று லிங்கபைரவியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தேவி பைரவி ஆராதனையின் 11ம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்த இந்த திருநாளில், தேவி சாதனா மேற்கொண்ட பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் சாதனாவை நிறைவு செய்தனர். மாலையில் சத்குருவுடன் சிறப்பு சத்சங்கம் நடைபெற்றது. அரசாங்கத்தின் பிடியிலிருந்து பக்தர்கள் கைகளுக்கு தமிழக கோயில்கள் மாறவேண்டும் என்று சத்குரு கூறுவதை சுட்டிக்காட்டி, பிராமணர்கள் மட்டுமே கோயில்களைப் பராமரிக்க வேண்டுமா என்ற கேள்வியை ஒரு தியான அன்பர் எழுப்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும், ஆன்மீக அடிப்படையிலும் பிராமணர்கள் மட்டுமே கோயில்களைப் பராமரிக்கத் தேவையில்லை என்பதை விளக்கிப் பேசினார் சத்குரு.