குருபௌர்ணமி - 2016 கொண்டாட்டங்கள்!
குருபௌர்ணமி விழாவில் சத்குருவால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட பல்வேறு சக்திவாய்ந்த தியான செயல்முறைகளும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும் தியான அன்பர்களை அருளில் மூழ்கடித்தன. விழாவில் முத்தாய்ப்பாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமழை உற்சாக நடனமாடி திளைக்கச் செய்தது.
 
 

ஆதியோகியாய் இருந்தவர் ஆதிகுருவாய் பரிணமித்து சப்தரிஷிகளுக்கு ஆன்மீக ஞானம் வழங்கிய உன்னத திருநாளான குரு பௌர்ணமி தினம், இந்த ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகி ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலை 4 மணியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தியான அன்பர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் ஈஷாவில் குவிந்தபடி இருந்தனர். வருகைதரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு உகந்த வசதிகளை ஈஷா தன்னார்வத்தொண்டர்களும் ஆசிரமவாசிகளும் திட்டமிட்டு செம்மையாக செய்திருந்தனர்.

குருபௌர்ணமி விழாவில் சத்குருவால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட பல்வேறு சக்திவாய்ந்த தியான செயல்முறைகளும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும் தியான அன்பர்களை அருளில் மூழ்கடித்தன. விழாவில் முத்தாய்ப்பாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமழை உற்சாக நடனமாடி திளைக்கச் செய்தது.

முன்னதாக இரண்டு நாட்கள் ஆங்கிலத்தில் நிகழ்ந்த ‘குருவின் மடியில்’ நிகழ்ச்சியிலும் குரு பௌர்ணமி விழா சத்சங்கத்திலும் சத்குரு பல்வேறு விஷயங்களை அன்பர்களுடன் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, 15000 வருடங்களுக்கு முன்பு சப்தரிஷிகளின் ஜொலிக்கும் உன்னத நிலையைக் கண்டு அவர்களின் மேல் ஆதியோகி தன் பார்வையை நிலைநிறுத்திய நாளான ஜூன் 21ஆம் நாள், ஒரு பௌர்ணமி நாளாக இருந்ததை சத்குரு குறிப்பிட்டார். அதுபோல 2016 ஜூன் 21ஆம் நாளும் ஒரு பௌர்ணமி நாளாக அமைந்துள்ளது (இனி இதுபோல் அமைவதென்பது 2062ஆம் ஆண்டில்தான்! 1948லும் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது). எனவே இது மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த வருடம் என்பதை சத்குரு சுட்டிக்காட்டினார். அடுத்து வரும் 12 வருடங்கள் ஆன்மீகத்திற்கு ஒரு பொற்காலமாக அமையவிருப்பதையும், அதற்காக தன்னார்வத் தொண்டர்கள் துணைநிற்க வேண்டுமென்பதையும் சத்குரு முன்மொழிந்தார்.

வருகின்ற மஹாசிவராத்தியன்று 112 அடி ஆதியோகியின் முகம் ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட உள்ளதை அறிவித்த சத்குரு, இந்த முகம் ஆதியோகியின் ஈடுஇணையற்ற ஆன்மீககொடைக்கு நன்றியின் அடையாளமாக இருக்குமென பகிர்ந்துகொண்டார்.

குருபௌர்ணமி விழாவில் சத்குருவால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட பல்வேறு சக்திவாய்ந்த தியான செயல்முறைகளும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும் தியான அன்பர்களை அருளில் மூழ்கடித்தன. விழாவில் முத்தாய்ப்பாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமழை உற்சாக நடனமாடி திளைக்கச் செய்தது. ஈஷாவின் ஆன்மீக பாதையில் ஒரு மைல்கல்லாக இந்த ஆண்டு குரு பௌர்ணமி விழா அமைந்தது என்றால் அது மிகையாகாது!

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1