காயத்ரியின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தனது குடும்பத்தை ஒருபோதும் கவனித்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் விஷயங்கள் மிகவும் மோசமானது, எதோ காரணத்திற்காக அவர் தனது தந்தையுடன் சண்டையிட்டு, ஆத்திரத்தில் தனது தந்தையை தலையில் தாக்கவே, அந்த வயதான முதியவர் இறந்து போனார். இதன் காரணமாக கயாத்ரியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பின், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது, அவரது கிராமவாசிகளின் தொடர்ச்சியான விமர்சனங்களால் அவரது வாழ்க்கை பரிதாபகரமானது. இதனால் மனமுடைந்து, அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஒரு குறுகிய இடைவெளியில் தந்தை மற்றும் தாத்தா இருவரையும் இழந்த ஏழைப் பெண் மனச்சோர்வடைந்து, சமாதானப்படுத்த முடியாதவளாக இருந்தாள். எங்கள் பள்ளியின் ஆசிரியர்களும் அவளுடைய வகுப்பு தோழர்களும் அவளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அந்த சோகத்தில் இருந்து அவளை மீட்டு எடுத்தார்கள். காயத்ரியின் அவலநிலையை பார்த்து அவளுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்க முடிவுசெய்யப்பட்டது. இந்த உதவித்தொகைதான் காயத்ரியின் இருண்டு கிடந்த வாழ்க்கைக்கு விளக்கேற்றியது. அது இல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் காயத்ரியால் படிப்பைத் தொடர்ந்திருக்க முடியாது.

ஈஷா வித்யா பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 60% க்கும் மேற்பட்டோர் இலவசமாக கல்வியைப் பெறுகின்றனர். பல நல்ல உள்ளம் கொண்டவர்கள், இந்தக் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையளித்து உறுதுணையாக இருக்கிறார்கள். இருந்தும் ஒவ்வொரு வருடமும் பள்ளி, பற்றாக்குறையை சந்திக்கிறது.

ஒரு குழந்தை பள்ளியில் சேர்ந்த பின், அவன் அல்லது அவளின் கல்விக்கு நன்கொடையாளர் நிதியுதவி செய்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் பள்ளியில் இருந்து ஒருபோதும் நீக்கப்படுவதில்லை. அவர்களுக்கு கல்விக்கு எந்த தடையுமில்லாமல் இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் படிப்பிற்கான செலவுகளை, வேறு சில நிகழ்ச்சிகளின் மூலம் நிதி திரட்டி சமாளித்துக்கொள்கிறோம் .

#GiveIndiaFundraisingChallenge இல் பங்கேற்பதற்கான எங்கள் குறிக்கோள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் படிப்பிற்கான செலவை சமாளித்துக்கொள்ள முடியும் என்பதால் மட்டுமே. உங்களுக்கும் இந்த ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றினால், இந்த லிங்க்கை பயன்படுத்தி நன்கொடையளிக்கலாம். 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.