யக்ஷாவின் நிறைவு நாளான இன்று நடைபெற்ற அஷ்வினி பிதே அவர்களின் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு நிகழ்ச்சியின் தொகுப்பு இங்கே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

டாக்டர்.அஷ்வினி பிதே தேஷ்பாண்டே அவர்கள் 'யமன்' ராகத்தில் தனது முதல் இசை ஆலாபனையைத் துவங்க, 7ஆம் நாள் யக்ஷா சிறப்பாக துவங்கியது. தொடர்ந்து சில அற்புத ராகங்களை ஆலாபனை செய்த அஷ்வினி அவர்கள், ஒரு உன்னத இசைப்பொழுதை வழங்கினார். மனதை இசையால் வருடிய அந்த இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில் அஷ்வினி அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் மலர்கொடுத்து ஆசி வழங்கினார் சத்குரு.

யக்ஷாவைப் பற்றி அறிய

அஷ்வினி பிதே தேஷ்பாண்டே அவர்களின் சிறப்புகள்

அஷ்வினி பிதே தேஷ்பாண்டே புகழ்பெற்ற "ஜெய்ப்பூர் - அட்ரௌளி" கயல்-கயக்கி இசைப் பாரம்பரியத்தில் ஒரு சிறந்த வாய்ப்பாட்டு கலைஞராவார். பாரம்பரியம் மிக்க இசை குடும்பத்தில் பிறந்த அஷ்வினி பிதே தேஷ்பாண்டே, 16 வயதில் "சங்கீத விஷாரத்" பயிற்சியை "கந்தர்வ மஹாவித்யாலயத்தில்" முடித்ததுடன், 1977ல் ஆல் இந்தியா ரேடியோவின் இசை போட்டியில் ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வென்றார். அமரர் பண்டிட் நாராயணராவ் தாதரின் கீழ் ஹிந்துஸ்தானி இசையினைக் கற்ற பிறகு, தனது குருவும், தாயாருமான திருமதி. மானிக் பிதே அவர்களின் கண்காணிப்பின் கீழ் 'ஜெய்பூர் கயக்கி' என்ற இசை அம்சத்தின் அனைத்து பாரம்பரிய அம்சங்களையும் கற்றார்.

சமஸ்கிருதத்தில் இவருக்கு இருக்கும் சரளமான மொழி வளமை, அவரது ஸ்துதிகள் உச்சரிக்கும் திறமைக்கு மெருகூட்டுகிறது. தனது பக்தி இசைத் தொகுப்புகளுக்கு, தானே இன்னிசை அமைத்து வெளிப்படுத்தியுள்ளார் அஷ்வினி.