நான் ஈஷா தத்தெடுத்துள்ள அரசுப் பள்ளியின் மாணவி பேசுறேன். ஈஷா அறக்கட்டளை, கிராமப்புற குழந்தைகளான எங்களோட நல்வாழ்விற்காகப் பல செயல்கள் செய்றாங்க... உங்கள் செல்ஃபோனிலிருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் செஞ்சா, என்னமாதிரி 7500 குழந்தைங்களோட ஒரு வருஷத்துக்கான படிப்புக்கு, நீங்க உதவ முடியும். எங்களுக்காக ஒரு மிஸ்டு கால் குடுங்களேன்...!


மஹிந்த்ரா நிறுவனம் நடத்தும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கான 'ஸ்பார்க் தி ரைஸ்' போட்டியில், ஈஷாவின் அரசுப் பள்ளித் தத்தெடுப்புத் திட்டம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது என்ற இனிய செய்தியைத் தெரிவிப்பதில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆனால், இறுதிச் சுற்று வாக்கடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே, நமது இந்த மகிழ்ச்சி பூரண மகிழ்ச்சியாகும். இது வெற்றியடைவது பற்றியல்ல, வாக்கெடுப்பில் ஈஷா வென்றால், சுமார் 7500 கிராமப்புற குழந்தைகளுக்கு ஒரு வருடப் பள்ளிப் படிப்பை வழங்க முடியும்.
1

31 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 28000 குழந்தைகள், ஈஷாவின் அரசுப் பள்ளித் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள். தரமான கல்வியோடு, நல்வாழ்வுக்கு அடிப்படையான உடலையும் மனதையும் செம்மைப்படுத்தும் பயிற்சிகளும் வழங்கப்படுவதால், இந்தக் குழந்தைகள் தங்கள் முழுத்திறனுடன் மிளிர்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு உதவ உங்களுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தைகளுக்காக வாக்களிக்க முடியும். இப்போதே அது சாத்தியம், இருந்த இடத்தில் இருந்தபடியே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எப்படி வாக்களிப்பது...?

உங்கள் செல்ஃபோனிலிருந்து ஒரே ஒரு மிஸ்டு கால்...

022 618 50 495 என்ற நம்பருக்கு உங்கள் செல்ஃபோனிலிருந்து ஒருமுறை மிஸ்டு கால் செய்தால் உங்கள் வாக்குப் பதிவாகிவிடும்.

அல்லது

MHRISE<space>P06869 என்று தட்டச்சு செய்து 54646 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம்.

குறிப்பு: மேலே உள்ளது ஆங்கில எழுத்து ஓ அல்ல. எண் பூஜ்யம்

இதற்காக எந்தக் கட்டணமும் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படமாட்டாது.

வாக்களிக்க கடைசி நாள் மார்ச் 20ந்தேதி.

உங்கள் ஒரு வாக்கு மிகவும் மதிப்பு மிக்கது, நீங்கள் பெற்றுத் தரும் வாக்குகளோ விலை மதிப்பில்லாதது. எனவே நீங்கள் வாக்களிப்பதோடு மற்றவர்களையும் வாக்களிக்கச் செய்யுங்கள்...!

வரும் தலைமுறையை வல்லமைப் படைத்ததாக்குவோம்‼!