தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. கர்ப்பம் மற்றும் பிரசவம் இயற்கையான ஒரு நிகழ்வு, ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இவற்றை சிக்கலானதாகவும் அச்சப்படும் ஒன்றாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு மாறிவரும் சூழலும், கர்ப்பிணிப் பெண்கள் எவ்வாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை பற்றிய அறியாமையும்தான் காரணங்கள். ஆரோக்கியமான குழந்தை உருவாகவும் இயற்கையான முறையில் பிரசவம் நிகழவும், கருவுற்றிருக்கும் தாயின் உடல் மற்றும் மனநிலை நல்ல நிலையில் இருப்பது அவசியம்.

நம்முடைய உடலும் மனமும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. மனதில் ஏற்படும் மாற்றங்கள் உடலையும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பெரிதும் பாதிக்கிறது. ஆரோக்கியம் என்பது கருவிலிருந்தே தொடங்குகிறது. வளரும் கருவின் ஆரோக்கியத்தையும் அக்கருவினை சுமக்கும் தாயின் ஆரோக்கியமும் மேம்பட, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் "ஈஷா ஆரோக்யா தாய்மை திட்டம்" என்னும் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. கருவுற்ற தாய்மார்களுக்காக பல இடங்களிலும் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி முதன்முதலில் சேலம் நகரில் துவங்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்

  • கர்ப்ப காலத்தின் பல்வேறு நிலைகள் பற்றியும், பிரசவம், பச்சிளங்குழந்தை பராமரிப்பு, தாய்ப்பால் மகத்துவம், குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்த விளக்கங்களும் எளிதாக புரியும் வண்ணம் ஒலி ஒளி காட்சிகளாக இடம் பெறும்.
  • தன்னைப் போன்ற தாய்மார்களுடன் பழகுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான சூழ்நிலை கிடைக்கும்.
  • விளக்க வகுப்புகள், கலந்துரையாடல்கள், செயல்முறை விளக்கங்கள், குழு விளையாட்டுக்கள், பகிர்ந்து கொள்ளுதல், ஆக்கப்பூர்வமான சிந்தனையை தூண்டும் பயிற்சிகள், சத்தான உணவுமுறை பற்றிய செய்முறை விளக்கங்கள் போன்றவை இடம் பெறும்.
  • மகப்பேறு மருத்துவர்களின் கர்ப்பகால கவனிப்பிற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் இருக்கும்.
  • சக்திமிக்க தியானம், பிராணாயாமம் மற்றும் ஆசனா போன்ற யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப் படும்.
  • இவ்வகுப்புகள் 15 வகுப்புகளாக வாரம் ஒரு முறை சுமார் 2 மணி நேரம் நடைபெறும்.
  • வகுப்புகள் தகுதி, திறமை மற்றும் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படுகிறது.

பலன்கள்

  • வளரும் உயிரை பற்றிய விழிப்புணர்வை தாயிடம் அதிகரிக்க செய்கிறது. இதனால் கரு முதலே தாய்க்கும் சேய்க்கும் நல்ல பந்தம் உருவாகிறது.
  • கருவின் சுமையை தாங்குவதற்கும், இயற்கையான முறையில் பிரசவிக்கவும், எலும்புகள், தசை மற்றும் தசை நார்கள் உறுதியாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும் இருக்க உதவுகிறது.
  • இங்கு கற்றுத்தரப்படும் யோகப் பயிற்சிகள் பிரசவத்தின் போது ஏற்படும் பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  • பிறக்கப் போகும் குழந்தையின் உடல் ம்ற்றும் மூளை நன்கு வளர பெரிதும் உதவுகிறது.
  • பேறு காலத்திற்குப் பிறகு உடல் விரைவில் பழைய நிலையை அடைய பெரிதும் உதவுகிறது.
  • சிக்கல் இல்லா சுகமான பிரசவம் என்பது இயற்கையான நிகழ்வாயிருக்க உதவுகிறது

வகுப்பு மற்றும் முன்பதிவு விபரம்

துவங்கும் நாள்: 22.04.2012

இடம்: ஈஷா ஆரோக்யா,
7/1, அத்வைத ஆசிரமம் ரோடு,
பேர்லேண்ட்ஸ், சேலம் 16.

முன்பதிவுக்கு : தொ.பேசி: 0427 2333232, 94425 48852, 94425 90018
மின்னஞ்சல்: info@ishaarogya.org
www.ishaarogya.org

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.